தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Joking Bad To Be Streamed In Netflix From This Month 20

Joking Bad: தி பாய்ஸ் ஆர் பேக்... வருகிறது ஜோக்கிங் பேட்

Aarthi V HT Tamil
Jan 19, 2023 10:06 AM IST

ஜோக்கிங் பேட் வரும் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நெட்ஃபிளிக்ஸ் ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜோக்கிங் பேட்
ஜோக்கிங் பேட்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிகழ்ச்சி பல திறமைகளை அறிமுகப்படுத்தியது. இதில் கலந்து கொண்ட சந்தானம் முழுநேர நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் லொள்ளு சபா நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. நெட்ஃபிளிக்ஸில் பிரபலமான பிரேக்கிங் பேட் வெப் சீரிஸை ஸ்பூஃப் செய்து ஜோக்கிங் பேட் என்ற டைட்டிலில் சுவாமிநாதன், ஜீவா, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜோக்கிங் பேட் என்ற தலைப்பில் , லொள்ளு சபாவின் முக்கிய நடிகர்கள் மீண்டும் வருவதைக் காட்டும் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பகுதி ஜனவரி 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவின் யூடியூப் சேனலில் வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், “ஐயம் நாட் மேக்கிங் தி மொக்க ஜோக், ஐயம் தி மொக்க ஜோக்” என பேசப்பட்டு உள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஜோக்கிங் பேட் இந்தியாவில் உள்ள மனோகர், சுவாமிநாதன், ஜீவா, சேசு போன்ற லொள்ளு சபா ரெகுலர்கள் பிரேக்கிங் பேட் ஸ்பூஃப் செய்வதை பார்க்க முடியும்.

இந்தியாவின் ஜோக்கிங் பேட் , லொள்ளு சபாவின் நடிகர்களுடன் பிரேக்கிங் பேட் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேக்கிங் பேட்

தொலைக்காட்சியில் 2008 - 2013 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நெடுந்தொடர் பிரேக்கிங் பேட். அமெரிக்காவில் குற்றவியல் சார்ந்த இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பிரேக்கிங் பேட் நெடுந்தொடர் பல விருதுகளை தட்டி சென்றது.

லொள்ளு சபா

விஜய் தொலைக்காட்சியில் 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான நிகழ்ச்சி லொள்ளு சபா . சந்தானம் மட்டுமின்றி ஜீவா, மனோகர், ஜாங்கிரி மதுமிதா, பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்களை இந்த நிகழ்ச்சி உருவாக்கி உள்ளது.

இந்த இரண்டு தொடர்களின் தீவிர ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது மீண்டும் ரீ-ரிட்டர்ன் செய்கிறது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்