தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thug Life: தக் லைஃப் படப்பிடிப்பில் திடீர் விபத்து.. காயங்களுடன் உயிர் தப்பிய நடிகர்

Thug Life: தக் லைஃப் படப்பிடிப்பில் திடீர் விபத்து.. காயங்களுடன் உயிர் தப்பிய நடிகர்

Aarthi Balaji HT Tamil
Jun 13, 2024 01:29 PM IST

Thug Life: தக் லைஃப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருகிறார். அவர் படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சி நடித்து கொண்டு இருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

தக் லைஃப் படப்பிடிப்பில் திடீர் விபத்து.. காயங்களுடன் உயிர் தப்பிய நடிகர்
தக் லைஃப் படப்பிடிப்பில் திடீர் விபத்து.. காயங்களுடன் உயிர் தப்பிய நடிகர்

Thug Life: ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம், தக் லைஃப். நடிகர் சிம்பு, கமல் ஹாசன், ஜெயம் ரவி, த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்'. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை மணிரத்னம் எழுதி இயக்கி வருகிறார்.

தக் லைஃப் ஷூட்டிங் அப்டேட்

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு 60 % சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. அதில் சண்டை, ஆக்‌ஷன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பில் விபத்து

இந்நிலையில் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு தளத்தில் சமீபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்து வருகிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் படப்பிடிப்பில் ஸ்டண்ட் காட்சி நடித்து கொண்டு இருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய நடிகர் ஜோஜு ஜார்ஜூக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ஜோஜு ஜார்ஜூக்கு பெரிய விபத்து ஏற்படாமல் நலமாக இருக்கிறாரா என கேட்டு வருகின்றனர். எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து காரணமாக ஜோஜு ஜார்ஜ் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

36 ஆண்டுகளுக்குப் பின் கமல் ஹாசன் -மணிரத்னம் கூட்டணி

இதன் மூலம், தக் லைஃப் படத்தின்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்து உள்ளது, இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், மும்பையில் கோலோச்சிய தாதா வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 1987ஆம் ஆண்டு உருவாக்கிய ‘நாயகன்’ திரைப்படம் உலகளவில் கல்ட் ஃபிலிமாக இருந்து வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் நடித்து வந்த துல்கர் சல்மான், திடீரென கால்ஷீட் பிரச்னை காரணமாக விலகி, லக்கி பாஸ்கர் என்னும் தெலுங்கு படத்தில் முழுமையாக நடித்து வருகிறார். இதனால், அந்த இடத்தில் துல்கார் சல்மானுக்குப் பதிலாக, சிம்புவை நடிக்க வைத்திருக்கிறார், மணிரத்னம். ஜெயம் ரவியும் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

மேலும், டைம் வார இதழ் மற்றும் சிஎன்என் மற்றும் ஐபிஎன் நிறுவனம், குறிப்பிட்ட உலகின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக, நாயகன் படத்தைக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்து உருவாகவுள்ள ‘தக் லைஃப்’படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பு உலகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவுக்கு ஜோடியான த்ரிஷா?

தக் லைஃப் படத்துக்காக, சிம்பு நீண்ட முடி வளர்த்து இருக்கிறார். இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பின், சிம்புவின் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.