எக்ஸை விட்டு ஓடிய டைரக்டர்.. இதெல்லாம் ஒரு காரணமா? நோன்டி நொங்கெடுக்கும் நெட்டிசன்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எக்ஸை விட்டு ஓடிய டைரக்டர்.. இதெல்லாம் ஒரு காரணமா? நோன்டி நொங்கெடுக்கும் நெட்டிசன்கள்..

எக்ஸை விட்டு ஓடிய டைரக்டர்.. இதெல்லாம் ஒரு காரணமா? நோன்டி நொங்கெடுக்கும் நெட்டிசன்கள்..

Malavica Natarajan HT Tamil
Oct 20, 2024 03:08 PM IST

ஜிக்ரா படத்தின் இயக்குனர் வாசன் பாலா, ஆலியா பட் நடித்த பாக்ஸ் ஆபிஸ் செயல்திறன் குறைவாக இருப்பதை ஆதரித்தார்.

எக்ஸை விட்டு ஓடிய டைரக்டர்.. இதெல்லாம் ஒரு காரணமா? நோன்டி நொங்கெடுக்கும் நெட்டிசன்கள்..
எக்ஸை விட்டு ஓடிய டைரக்டர்.. இதெல்லாம் ஒரு காரணமா? நோன்டி நொங்கெடுக்கும் நெட்டிசன்கள்..

முன்னணி நடிகையான ஆலியா

இவர் தொடர்ந்து ஹைவே, உட்தா, டியர் ஜிந்தகி, கல்லி பாய், ராக்கி ராணி, கங்குபாய் கத்தியவாடி, 2 ஸ்டேட்ஸ், பிரம்மாஸ்திரா, ஆர்ஆர்ஆர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டின் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ஆக்ஷனில் கலக்கி, வசூலில் சொதப்பிய ஜிக்ரா

இந்நிலையில் தான் இவர், இயக்குநர் வாசன் பாலாவின் ஜிக்ரா எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களமாக அமைந்துள்ள இந்தப் படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படம் விஜயதசமியை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. நடிகை ஆலியா பட்டின் ஜிக்ரா திரைப்படம் தான் அவரது வாழ்நாளிலேயே மிகவும் குறைவானபாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்ற படம் என பல செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

அடையாளம் தெரியாதத நாட்டின் சிறையில் சிக்கியிருக்கும் தனது சகோதரனை மீட்க அதிரடியாக போராடும் பெண்ணாக இந்தப் படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார் ஆலியா பட்.

ஆனால், படத்தின் கதை அவ்வளவாக மக்களை ஈர்க்காத நிலையில், படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பட சறுக்கலை சந்தித்தது.

இயக்குநர் தீர்மானம்

ஆனால், இதுகுறித்து பேசிய படத்தின் இயக்குநர் வாசன் பாலா, பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்போதும் படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை என கருத்து தெரிவித்திருந்ததுடன், ஜிக்ரா படத்தைப் பற்றி பெருமையாகவும் பேசி வந்தார்.

தொடரும் விமர்சனம்

இது இணையத்தில் பேசு பொருளானது. இயக்குநரின் இந்த பேச்சை பலரும் விமர்சித்து வந்தனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் படக்குழுவினர், அதன் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், பாக்ஸ் ஆபிஸ் குறித்த இயக்குநரின் பேச்சை தொடர்ந்து விமர்சித்து வந்த வண்ணம் இருந்தனர். மேலும், இப்படத்தின் இயக்குநர் மிகவும் திமிராக பேசுகிறார் எனவும் கூறி வந்தனர்.

எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறிய இயக்குநர்

இந்நிலையில், திடீரென்று அவர் தனது எக்ஸ் தள கணக்கை நீக்கியுள்ளார். இவர் இதற்கு முன் பதிவிட்ட கருத்துகள் எல்லாம் மறைந்து போயின. இதனைக் கண்ட நெட்டிசன்கள் அவரை மேலும் விமர்சித்தனர். தொடர்ந்து வரும் எதிர் கருத்துகளை பொருத்துக் கொள்ள முடியாமல் தான் அவர் எக்ஸ் தளத்தை விட்டு சென்றுவிட்டார் எனவும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் அவருக்கு சிலர் ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆதரவு தெரிவித்த மக்கள்

படம் குறித்த ப்ரொமோஷன் வேலைகளில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் என அனைவரும் பங்கேற்ற நிலையில், படம் தோல்வியை சந்தித்தப் பின் இதற்கு எப்படி இயக்குநர் மட்டும் பொறுப்பேற்க முடியும்? மற்ற திரைக் கலைஞர்கள் ஏன் இந்த விஷயத்திற்காக குரல் கொடுக்க முன் வரவில்லை என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.