தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Jayanthi Kannappan Latest Interview About Prakash Raj Lalitha Kumari Family Life Issue

Jayanthi Kannappan: மூத்தமகன் உயிரிழப்பு… கசந்து போன காதல் வாழ்க்கை..விவாகரத்து பத்திரத்தில் படிந்த மை!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 21, 2024 05:53 AM IST

சினிமா உலகை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே. யாராவது உங்களது வாழ்க்கையில் புதிதாக வரும் பொழுது, ஏற்கனவே இருந்த அந்த கட்டமைப்பானது உடைந்து விடும். ஆண் மகன்கள் வெளியே செல்கிறார்கள். நிறைய பேரை பார்க்கிறார்கள். யாராவது ஒருவரிடம் தங்களது மனதை பறி கொடுத்து விடுகிறார்கள்.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் அதில் பேசும் போது, “ லலிதாவின் அக்காதான் டிஸ்கோ சாந்தி. வெளி இடங்களிலிருந்து இங்கு நடிக்க வருபவர்களுக்கு டிஸ்கோ சாந்தியின் வீடு ஒரு அடைக்கலமாக இருந்தது. அந்த வழியில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் தான் நடிகர் பிரகாஷ்ராஜ். 

இவர் டிஸ்கோ சாந்தியின் சகோதரியை லலிதாவை பார்க்க நேருகிறது. இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு அவர்களது திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் பிறந்தன. ஒரு மகன், இரண்டு மகள்கள் சந்தோஷமான இல்லற வாழ்க்கை என அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகத்தான் சென்று கொண்டிருந்தது. 

சினிமா உலகை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே. யாராவது உங்களது வாழ்க்கையில் புதிதாக வரும் பொழுது, ஏற்கனவே இருந்த அந்த கட்டமைப்பானது உடைந்து விடும். ஆண் மகன்கள் வெளியே செல்கிறார்கள். நிறைய பேரை பார்க்கிறார்கள். யாராவது ஒருவரிடம் தங்களது மனதை பறி கொடுத்து விடுகிறார்கள். 

அப்படித்தான் பிரகாஷ்ராஜும் தன்னுடைய மனதை வெளியே பறி கொடுத்தார். இதனையடுத்து லலிதாவும் அவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். அந்த சூழ்நிலையில்தான் பிரபுதேவா ரமலத் ஆகியோரின் பிரிவும் நடந்தது. அவர்கள் இரண்டு பேரும் கார் ஓட்டிக்கொண்டு வரும் போது, இவ்வளவு பெரிய காரை அழகாக ஓட்டும் நீங்கள், உங்களுடைய கணவர்களை உங்களுடன் ஒழுங்காக வைத்துக்கொள்ள தெரியவில்லையே என்று கேட்டேன். 

இதில் ஒரு சிக்கலான விஷயம் என்னவென்றால், இப்படி கணவன் விட்டுச் செல்லும் பொழுது, கையில் வேலை இருக்கும் பெண்ணோ அல்லது அரசு பணியில் இருக்கும் பெண்ணோ வாழ்க்கையை எப்படியாவது கடத்தி விடுவார்கள். 

ஆனால் இது போன்ற பெண்கள் அடுத்ததாக என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியே. காரணம் இவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. பிரபுதேவாவிற்கு எப்படி அவரின் மூத்த மகன் தவறினாரோ, அதேபோல பிரகாஷ்ராஜுக்கும் அவருடைய மூத்த மகன் தவறிவிட்டார். 

பிரகாஷ்ராஜ் விவாகரத்து முடிவை எடுத்த போது, லலிதா; என்ன இருந்தாலும் பிரகாஷ்ராஜ் எனக்கு கணவர். என்னுடைய மூன்று குழந்தைகளுக்கு தந்தை. அவர் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நான் சம்மதிக்கிறேன். 

அவரை மேற்கொண்டு எந்த காரணத்தைக் கொண்டும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொன்னார். பிரகாஷ்ராஜ் லலிதாவை பிரிந்தால் கூட, லலிதாவிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தற்போது அவரை செய்து கொண்டிருக்கிறார். 

தன்னுடைய குழந்தைகளை வெளிநாடுகளில் படிக்க வைத்து இப்போது வரை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு முறை திருமண வீட்டில் நான் பிரகாஷ் ராஜை சந்தித்த பொழுது, அவர் என்னிடம், லலிதாவின் மனதிற்கு அவர் எங்கு இருந்தாலும் நன்றாக இருப்பாள்” என்று சொன்னார்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்