“குப்பையை கிளறிக்கிட்டே இருக்கக்கூடாது.. பிரேக் எடுத்து தேடுனாதான் நமக்கான பொருள் நம்மகிட்ட” - ஜெயம் ரவி ஓப்பன் டாக்!
ஜெயம் ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது அவர் உறவில் பிரேக் எடுப்பது குறித்து பேசி இருக்கிறார்.
பிரபல நடிகரான ஜெயம் ரவி, தன்னுடைய மனைவியான ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அண்மையில் அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மனைவியான ஆர்த்தி, இந்த முடிவு தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டது என்றும், தான் ஜெயம் ரவியுடன் பேச அனுமதி கேட்டும், அவர் நேரம் கொடுக்க வில்லை என்றும் பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் ஆர்த்தி மீது பல விதமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதற்கு அவர் பதிலடியும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் வருகிற தீபாவளி ஸ்பெஷலாக இவரின் பிரதர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதனை புரோமோட் செய்யும் வண்ணம் ஜெயம் ரவி கலாட்டா சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டியில், பணம் பற்றியும் ரிலேஷன்ஷிப் பிரேக் அப் பற்றியும் பேசி இருக்கிறார்.
நிறைய பணத்தை பார்த்து விட்டேன்
அதில் அவர் பேசும் போது “ நான் சிறு வயதிலேயே நிறைய பணத்தை பார்த்து விட்டேன். என்னுடைய அப்பா வீட்டிற்கு கெட்டுகெட்டாக பணத்தைக் கொண்டு வருவார். அதை பார்த்து, பார்த்து எனக்கு சிறு வயதிலிருந்தே அதன் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது.
அதே நேரம் பணம் தேவையில்லை என்பதையும் யாரும் கூற முடியாது. நான் என்னுடைய புரிதலில், அந்த பணம் எவ்வளவு இருந்தால் நீ சந்தோஷமாக இருப்பாய் என்ற கேள்வியே இங்கு முக்கியமானது. உன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றால், உனக்கு பணம் இன்னும் வந்தாலும் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியாது.
எனக்கு நானே இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்க பழகிக்கொள் என்று கூறிக் கொள்வேன். நம் கையில் பத்து ரூபாய் இருந்தால், அதற்கு ஏற்றார் போல செலவழிப்போம். 10 கோடி இருந்தால் அதற்கு ஏற்றார் போல நாம் செலவழிப்போம். அவ்வளவுதான்.” என்று பேசினார்.
அது எங்கே இருக்க வாய்ப்பு?
மேலும் பிரேக் அப் பற்றி பேசும் போது, “உங்களுக்கு வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரலாம். அது ரிலேஷன் சம்பந்தமான பிரச்சினையாக கூட இருக்கலாம். அப்படி வரும் பொழுது முதலில் அதிலிருந்து விலகி தனிமையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஏதோ ஒன்றை நீங்கள் குப்பைக்குள் தேட வேண்டும் என்றால், முதலில் அது எங்கே இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை குறித்த தெளிவு உங்களுக்கு வேண்டும்.
அது இல்லாமல் நாம் தேடிக்கொண்டே இருந்தால், கடைசி வரை நாம் தேடிக்கொண்டே தான் இருப்போம். ஆகையால், கொஞ்சம் தனியாக உட்கார்ந்து, நாம்தான் இந்தக் குப்பையில் அதனை போட்டோம். அது எங்கே இருக்க வாய்ப்பு இருக்கிறது?. எவ்வளவு அழுத்தத்தில் அதனை நாம் போட்டோம். அது மிக ஆழமாக உள்ளே சென்றிருக்குமா?.
மேலோட்டமாக கிடக்க வாய்ப்பு இருக்கிறதா இதையெல்லாம் நீங்கள் கேட்டுவிட்டு, நீங்கள் தேட ஆரம்பித்தால் உங்களுக்கு அழுத்தமே இருக்காது. வந்த உடனேயே நீங்கள் அதை எடுத்து விடுவீர்கள். நீங்கள் குப்பையையும் வைத்துக்கொண்டு, கிளறியும் கொண்டு, தேடிக் கொண்டே இருந்தால், எப்போது நீங்கள் தேடிய பொருளை பெறுவீர்கள். ஆகையால், ஒரு பிரேக் எடுங்கள்; அதைப் பற்றி யோசிங்கள். தெளிவை உண்டாக்குங்கள். முதலில் உங்களது மனதில் அது எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிங்கள் அதன் பின்னர் தேடுங்கள்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்