பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி! ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி! ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து!

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி! ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து!

Suguna Devi P HT Tamil
Oct 06, 2024 09:37 AM IST

தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவான வெற்றிப் படமான திருசிற்றம்பலம் திரைப்படத்தில் ‘மேகம் கருக்காத’ பாடல் உள்ளது. இப்பாடலின் நடன இயங்குனாராக ஜானி மாஸ்டர் பணியாற்றி இருந்தார். இந்த பாடலிற்காக இவருக்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி! ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து!
பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி! ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து!

நடன இயக்குநர் ஜானி 

தமிழ், தெலுங்கு உட்பட பல இந்தியா மொழி திரைபடங்களில் ஜானி, நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் மிகுந்த பிரபலமான பாடல்களில் இவர் பணியாற்றியுள்ளார். விஜய் நடித்துள்ள பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக இவர் இயக்கிய ஜெயிலர் படத்தின் ‘காவாலா’பாடல் பட்டித் தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. திருசிற்றம்பலம் படத்தின் மேகம் கருக்காத பாடலுக்காக தேசிய விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இவர் தற்போது வரை ஸ்டார் ஹீரோகக்கள்  நடிக்கும் படங்களுக்கு வாண்டெட் நடன இயக்குனராக இருந்து வருகிறார். இவரது நடன அசைவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வண்ணமும், துள்ளி குதித்து ஆடும் வண்ணமும் இருந்து வருகிறது.  

பாலியல் குற்றச்சாட்டு  

ஹைதராபாததைச் சேர்ந்த அந்த பெண் பல ஆண்டுகளாக ஜானி மாஸ்டருடன் துணை நடன இயங்குனாராக பணியாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார். இவர் சென்னை, கேரளா போன்ற வெவ்வேறு இடங்களுக்கு சூட்டிங்கிற்கு செல்லும் போது அங்கு ஜானி மாஸ்டர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட போது 14 வயதிற்கும் கீழ் இருந்ததால், ஜானி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஜானி சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். மேலும் தொழில் ரீதியாக ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஜானி பாஷாவுக்கு தேசிய விருது அக்டோபர் 8 ஆம் தேதி புது தில்லியில் வழங்கபபட இருந்தது. இந்நிலையில் விழாவில் பங்கேற்பதற்காக ஜானிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு காரணமாக அவருக்கு வழங்கப்பட இருந்த தேசிய விருது ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

கேரள திரையுலகை அதிர வைத்த ஹேமா கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து பல பாலியல் குற்றச்சாட்டுகள் திரை பிரபலங்கள் மீது வந்த வண்ணம் உள்ளது. ஜானியின் தேசிய விருது ரத்து திரை உலகினர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.