Jailer Third Single: ஜூஜூபி மேட்டர்.. தூள் கிளப்பும் ஜெயிலர் மூன்றாவது பாடல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer Third Single: ஜூஜூபி மேட்டர்.. தூள் கிளப்பும் ஜெயிலர் மூன்றாவது பாடல்

Jailer Third Single: ஜூஜூபி மேட்டர்.. தூள் கிளப்பும் ஜெயிலர் மூன்றாவது பாடல்

Aarthi V HT Tamil
Jul 26, 2023 06:26 PM IST

ஜெயிலர் படத்தின் ஜூஜூபி மேட்டர் பாடல் வெளியாகி உள்ளது.

ஜூஜூபி மேட்டர்
ஜூஜூபி மேட்டர்

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கிறார். முன்னதாக இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அதனைத்தொடர்ந்து தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் வெளியான காவாலயா பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல், ‘ஹூக்கும்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி ஹிட்டானது.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான ஜூஜூபி மேட்டர் பாடல் வெளியாகி உள்ளது. சூப்பர் சுபு பாடல் வரிகளை எழுத, அனிருத், தீ, ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் பாடி உள்ளனர்.

முன்னதாக, ஜெயிலர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியானது. அதன் படி ஜெயிலர் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் என தகவல்கள் சொல்லுகின்றன.

ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனை அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.