Jailer Movie Review: ‘என்ன நெல்சன் பண்ணி வெச்சிருக்கீங்க?’ ஜெயிலர் FDFS முழு விமர்சனம்!
சில இடங்களில் படம் தோய்வை கொடுத்தாலும் நெல்சன் இம்முறை நம்மை முழுமையாக ஏமாற்றவில்லை.
மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
கதையின் கரு:
போலீஸ் மகன், குறும்பு பேரன், ஓய்வு காலம் என கடைசி கால வாழ்க்கையை வாஞ்சையோடு வாழ்ந்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில்தான் சிலைக்கடத்தல் பிரச்சினை ஒன்றில் ரஜினியின் மகன் கேங்ஸ்டர் ஒருவரை பொளந்து கட்டுகிறார்.
இதனைப்பார்த்து கொதித்து எழுந்த கேங்க்ஸ்டர் தலைவன், ரவியை கொன்று விட்டதாக காட்சிப்படுத்த படுகிறது. இதைக்கேட்டு நொந்து போன ரஜினி தன்னுடைய பழைய முகத்தை காட்டுகிறார்.
கடைசியாக கேங்ஸ்டர் தலையை வெட்ட ரஜினி செல்லும் கடைசி நொடியில் மகன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி அவருக்கு கிடைக்கிறது. ஆனால் மகனை திரும்ப ஒப்படைக்க கேங்ஸ்டர் டீல் ஒன்றை பேச, அதனை செய்து முடிக்க களத்தில் இறங்குகிறார் ரஜினி அதன் பின்னர் என்ன ஆனது என்பது மீதிக்கதை.
குறும்பு தாத்தா, கொதித்து எழும் அப்பா, மிரட்டல் ஜெயிலர் என நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார். அவ்வப்போது அவர் அடிக்கும் நெல்சன் டச் காமெடிகளும் ரசிக்க வைக்கின்றன. .
அவருக்கு அடுத்ததாக கவனம் ஈர்ப்பவர் வில்லன் விநாயகன். வில்லனிசத்தில் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு வேறுரகம். மற்ற முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் கெஸ்ட் ரோல் தான். ஆனாலும் அவர்களுக்கான மாஸ் அவர்கள் இடம் பெற்று இருக்கும் காட்சிகளில் இடம் பெற்று இருக்கிறது.
இதில் சுனிலுக்கு மட்டும் கொஞ்சம் வித்தியாசமான ரோல். அதை அவர் கன கச்சிதமாக செய்து இருக்கிறார். நெல்சன் ஸ்டைல் பிளாக் காமெடிகள் அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால் அவர் காட்டி இருக்கும் வைலன்ஸ் கொஞ்சம் ஆச்சரியம்.
ரஜினி மாஸ் மொமண்டுகள் அனைத்தையும் நெல்சன் தனக்கான பாணியில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அவர் ரஜினியை ஜெயிலர் லுக்கில் காண்பித்தது மிரட்டல். அனிருத்தின் இசை படத்தை தூண் போல தாங்கி நிற்கிறது. சில இடங்களில் படம் தோய்வை கொடுத்தாலும் நெல்சன் இம்முறை நம்மை முழுமையாக ஏமாற்றவில்லை.
டாபிக்ஸ்