Jailer Update: சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர்! டைட்டில் தொடர்பாக மலையாள இயக்குநர் கடிதம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer Update: சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர்! டைட்டில் தொடர்பாக மலையாள இயக்குநர் கடிதம்

Jailer Update: சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர்! டைட்டில் தொடர்பாக மலையாள இயக்குநர் கடிதம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 18, 2023 08:58 AM IST

ஜெயிலர் படத்தின் மலையாள பதிப்பு வேறொரு டைட்டிலில் வெளியிட மலையாள பட இயக்குநர் சக்கீர் மடத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
ஜெயிலர் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையில் வா காவாளியா என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலாக ஹூக்கும் என பாடல் வெளியாகியுள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் தென்னிந்திய மொழிகளிலும், இந்தி மொழியிலும் ஒரே நாளில் வெளியாகிறது. இதையடுத்து ஜெயிலர் படத்துக்கு தற்போது முதல் முறையாக சிக்கல் எழுந்துள்ளது.

மலையாள சினிமா இயக்குநர் சக்கீர் மடத்தில், ஜெயிலர் என்ற டைட்டில் 2021ஆம் ஆண்டிலேயே கேரளா பிலிம் சேம்பரில் பதிவு செய்துள்ளார். இவர் தற்போது இதே பெயரில் படத்தை உருவாக்கி வருவதால், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை மலையாளத்தில் மட்டும் வேறொரு டைட்டிலில் ரிலீஸ் செய்யுமாறு படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் இதற்கு சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்திருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக மலையாளர் இயக்குநர் சக்கீர் மடத்தில் கூறியதாவது:

"ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு பின்னர் எங்களது வழக்கறிஞர் மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினோம். அதில் கேரளாவில் மட்டும் படத்தை வேறொரு தலைப்பில் ரிலீஸ் செய்யுமாறு கூறியிருந்தோம். இந்த கடிதத்தின் நகல் ரஜினிகாந்த் மற்றும் தென்னிந்தி பிலிம் சாம்பருக்கும் அனுப்பினோம்.

ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர்கள் மோகன்லான், விநாயகன் போன்றோர் நடித்திருப்பதால், எங்களது படத்தின் மதிப்பு குறைக்கலாம் என்பதே எங்களது வாதமாக முன் வைத்தோம். எங்கள கடிதத்துக்கு சுமார் ஒரு வாரம் கழித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளித்த பதிலில், இந்த நேரத்தில் படத்தின் தலைப்பை மாற்றுவது முடியாத காரியம் எனவும், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்போதவதாகவும் தெரிவித்திருந்தனர். அத்துடன் ஜெயிலர் பட தலைப்பை நாங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நான் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் கடன் வாங்கி படம் எடுத்துள்ளேன். சன் பிக்சர்ஸ் போன்ற மிக பெரிய நிறுவனத்தை எதிர்க்கும் எண்ணம் இல்லை. அவர்கள் சட்ட ரீதியாக இதை சந்திக்கும்போது எனக்கும் வேறு வழியில்லை. தற்போது இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஜெயிலர் பட புரொமோஷனில் இறங்கியுள்ள படக்குழு படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.