புதுமுகங்கள் சேர்ந்து தெறிக்க விட்ட திரைப்படம்.. பயணங்கள் முடிவதில்லை ஒரு பொக்கிஷம்
பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகளாகின்றன.
புதுமுகங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய திரைப்படம் தான் பயணங்கள் முடிவதில்லை. இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்த பயணங்கள் முடிவதில்லை. தயாரிப்பாளரிடம் சுந்தர்ராஜன் கதை சொன்ன பொழுது அவர் புதுமுக இயக்குனர் என்பதால் தயாரிப்பாளர் சற்று தயங்கியுள்ளார்.
அதற்குப் பிறகு தனது நண்பர்களை வைத்து கோவை தம்பி என்று தயாரிப்பாளர் இந்த திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு நடிகர் சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் பன்னீர் புஷ்பங்கள் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற காரணத்தினால் அவரிடம் அணுகுமுறை செய்யப்பட்டது. விபத்து ஒன்றின் சுரேஷ் சிக்கிக்கொண்ட காரணத்தினால் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதற்குப் பிறகு நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படத்தில் நடித்த மைக் மோகன் என்ற புதிய ஹீரோவை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பதா நாயகி பாத்திரத்தில் நடிகை பூர்ணிமாவை அனுசய போது அவர் இதில் நடிக்க சற்று தயங்கியுள்ளார். ஏனென்றால் அவரும் அறிமுகமாக ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஒரு இசை காவியம் என்கின்ற காரணத்தினால் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் சுந்தர்ராஜன் சென்றிருக்கிறார். முழு கதையையும் கேட்டு அதற்கு பிறகு இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.
வேலையில்லாமல், சாப்பிட கூட வழியில்லாமல் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழக்கூடிய இளைஞன் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் நடித்திருப்பார் இந்த கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக அவர் பொருந்தி இருப்பார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பூர்ணிமாவோடு அவருக்கு காதல் ஏற்படுகிறது. இந்த காதல் காட்சிகளை மிகவும் அருமையாக எடுத்திருப்பார் சுந்தர்ராஜன். பூர்ணிமாவோடு நடத்தும் உரையாடல், அவரோடு சேரக்கூடிய காட்சிகள் அனைத்திலும் மிகவும் அருமையாக தனது நடிப்பை மோகன் வெளிப்படுத்தியிருப்பார்.
மோகனுக்கு இணையாக தனது சிறந்த நடிப்பை நடிகை பூர்ணிமா வெளிப்படுத்தியிருப்பார். இருவருமே மாறி மாறி தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். அந்த அளவிற்கு சுந்தர்ராஜன் வேலை வாங்கி இருப்பார்.
மோகனுக்கு நண்பனாக எஸ் வி சேகர் நடித்திருப்பார். மோகன் மற்றும் எஸ்.வி.சேகர் இணையும் காட்சிகள் அனைத்தும் நினைவில் நிற்கும். அளவிற்கு அருமையாக இருக்கும் ஒரு சிறந்த நட்புக்கு இலக்கணமாக இருவரும் இதில் நடித்திருப்பார்கள். தனது பாத்திரத்தை வரும் கொஞ்ச நேரத்தில் சரியாக பதித்து சென்றிருப்பார் எஸ்.வி.சேகர்.
இளையராஜாவின் ஆல்பத்தில் இந்த திரைப்படம் மிகவும் ஸ்பெஷல் ஆகும். அவரது ரசிகர்களுக்கு அனைவருக்கும் பிடித்த திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். இதில் வரக்கூடிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தனர்.
குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் இளைய நிலா பொழிகிறது என்ற பாடல் இன்றுவரை பலருது பிளே லிஸ்டில் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு காலத்தால் அளிக்க முடியாத திரைப்பாடலாக இது இருந்து வருகிறது. இசை எந்த அளவிற்கு ரசிகர்களை பெற்றதோ அந்த அளவிற்கு அதன் வரிகளும் மிகப்பெரிய பெயர் பெற்றது. அதற்கு மிக முக்கிய காரணம் கவிஞர் வைரமுத்து தான்.
இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்ட பொழுது இந்த இளைய நிலா பாடல் அப்படியே அந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது அந்த அளவிற்கு மிகப்பெரிய ஹிட் ஆன பாடலாக படத்தில் அது அமைந்தது. மேலும் கூற வேண்டுமென்றால் திரைப்படத்தின் ஒரு அங்கமாக அந்த பாடல் அமைந்தது.
சோகமான முடிவை எப்போதும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. சில திரைப்படங்களில் சோகமான முடிவுகள் தான் அந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது அந்த யுக்தியை சரியாக கையாள தெரிந்த இயக்குனர்களின் முதல் இடத்தில் இருப்பவர்தான் ஆர். சுந்தர்ராஜன். சேர்ந்து பழகும் இருவர் பிரிகின்ற சூழலை மக்களின் ஏற்றுக் கொள்ளும்படி உருவாக்குவது ஒரு சிறந்த படைப்பாளியின் திறமையாகும். சரியாக கையாண்டிருப்பார் ஆர்.சுந்தர்ராஜன்.
இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 42 ஆண்டுகளாகின்றன. சொல்லப்போனால் தமிழ் சினிமாக்களில் ரசிகர்களை திருப்தி படுத்தக்கூடிய முழுமையான திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். ஆர் சுந்தர்ராஜன் கலை படைப்பில் இந்த திரைப்படத்தின் பயணங்கள் என்றுமே முடியாது.
டாபிக்ஸ்