Veera Abhimanyu: வரலாற்று காவியம் வீர அபிமன்யு.. சரித்திர குழுவினாக மாறிய படம்.. கண்ணதாசன் வரிகள் உச்சம்
Veera Abhimanyu: வீர அபிமன்யு திரைப்படம் இன்றுடன் வெளியாகி அறுபது ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவின் சரித்திர குறியீடில் இந்த வீர அபிமன்யு திரைப்படத்திற்கு தனி இடம் உண்டு என்று கூறினால் அது மிகையாகாது.
Veera Abhimanyu: தமிழ் சினிமா தற்போது இந்தியாவில் தவிர்க்க முடியாத துறையாக திகழ்ந்து வருகின்றது. இன்றுவரை தவிர்க்க முடியாத நிலைமையில் இருக்க காரணம் என்னவென்றால் தனித்துவமான தனக்கென ஒரு எதார்த்தத்தை தமிழ் சினிமா இன்று வரை விட்டுக் கொடுக்காமல் தன் வசம் வைத்திருக்கின்றது.
புராண கதைகளை சுலபமாக எளிதில் கையாளக்கூடியதில் தமிழ் சினிமா எப்போதும் உச்சம் பெற்ற துறையாகும். தற்போது இருக்கக்கூடிய பொதுமக்கள் அனைவருக்கும் புராணங்களை எளிதில் கடத்தியது தமிழ் சினிமா தான் என்று கூறினால் அது மிகையாகாது.
ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் இப்படித்தான் இருப்பார்கள் என மக்கள் மத்தியில் பதிய வைத்தது தமிழ் சினிமா தான். போன கதைகள் உண்மையோ அல்லது பொய்யோ ஆனால் எளிதில் மக்கள் மத்தியில் பதிய வைத்தது தமிழ் சினிமா தான் என்று கூறினால் அதுதான் உண்மை.
ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனித்தனியாக திரைப்படங்களாக எடுத்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது தமிழ் சினிமா தான். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் வீர அபிமன்யு.
புராணங்களை திரைப்படங்களாக்கி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இன்று வரை மக்களின் சிந்தனைக்கு உள்ளாக்கியது தமிழ் சினிமா தான். அந்த வரிசையில் வீர அபிமன்யு திரைப்படத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு.
2 மொழி
இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை வி. மதுசூதன ராவ் இயக்கினார். இந்த இயக்குனர் சுமார் 70 படங்களுக்கு மேல் இயற்றிய பிறகு இந்த திரைப்படத்தை மக்கள் மத்தியில் கொடுத்தார். இவர் ஒரு தெலுங்கு திரைப்பட இயக்குனர்.
இந்த திரைப்படத்தில் ஏ.வி.எம் ராஜன் அபிமன்யு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன் நடித்திருப்பார். நடிகர் பாலாஜி அர்ஜுனன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். துரியோதனன் ஆக டி.கே பகவதி நடித்திருப்பார். முத்திரை கதாபாத்திரத்தில் காஞ்சனா நடித்திருப்பார்.
அர்ஜுனனின் மகன் தான் வீர அபிமன்யு. அவருடைய கதை தான் இந்த திரைப்படம். அப்படியே தெலுங்கு சினிமாவில் காஞ்சனா கதாபாத்திரத்தை மட்டும் வைத்துவிட்டு மீதி அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குனர் அப்படியே மாற்றி இருப்பார்.
தெலுங்கில் வீர அபிமன்யுவாக சோபன்பாபு நடித்திருப்பார். கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் என்.டி.ராமராவ் நடித்திருப்பார். இசை மட்டும் கே.வி.மகாதேவன். சொல்லி தெரிய வைக்க வேண்டியதில்லை அத்தனை பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன.
கண்ணதாசன்
கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளும் மக்கள் மத்தியில் எளிதாக பதிந்து மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பார்த்தேன்.. ரசித்தேன்.. பக்கம் வர என அனைத்து வரிகளும் முடியும் பொழுது தேன் என்று முடிவது போல் கண்ணதாசன் எழுதியிருப்பார். பி ஸ்ரீனிவாஸ் சுசிலா குரலில் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும் விமர்சகர் ரீதியாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் என்.டி ராமராவ் நடித்திருக்கலாம் என தமிழில் அனைத்து ரசிகர்களும் கூறினார்கள். ஜெமினி கணேசன் தனது வேலையை சரியாக செய்திருப்பார். புராணங்களை சரிவர மக்கள் மத்தியில் பதித்துச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அந்த செயலை இந்த திரைப்படம் தெளிவாக செய்திருக்கும். இந்த வீர அபிமன்யு திரைப்படம் இன்றுடன் வெளியாகி அறுபது ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவின் சரித்திர குறியீடில் இந்த வீர அபிமன்யு திரைப்படத்திற்கு தனி இடம் உண்டு என்று கூறினால் அது மிகையாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்