சிபிஐ சிவாஜி.. ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படம்.. விறுவிறுப்பான திரைக்கதை.. 55ஆம் ஆண்டில் தங்கச் சுரங்கம்
55 Years of Thanga Surangam: தங்கச் சுரங்கம் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 55 ஆண்டுகளாகின்றன. சிவாஜி கணேசனின் சினிமா பயணத்தில் தவிர்க்க முடியாத மிக முக்கிய திரைப்படங்களில் தங்கச் சுரங்கம் படமும் ஒன்று என கூறினால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக இன்று வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விளங்கி வருகின்றார். அவருடைய எத்தனையோ திரைப்படங்கள் காலம் கடந்து இன்று வரை வரலாற்று குறியீடாக இருந்து வருகிறது. நமது வரலாற்றில் வாழ்ந்த நாயகர்களை நம் கண் முன் நிறுத்தியது சினிமா தான் என்று கூறினால் அது மிகையாகாது குறிப்பாக அந்த கதாபாத்திரங்களை இப்படித்தான் இருப்பார்கள் என்று மக்களுக்கு எடுத்துரைத்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.
கட்டபொம்மன், கர்ணன், வ.உ.சிதம்பரனார் என அனைவரையும் நம் கண் முன் நிறுத்தியது நடிகர் சிவாஜி கணேசன் தான். அப்படிப்பட்ட சிவாஜி கணேசன் என்று திரை வாழ்க்கையில் ஒரு திரில்லர் திரைப்படம் தான் இந்த தங்க சுரங்கம். ஜேம்ஸ்பாண்ட் பாண்டியன் முதல் முறையாக சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் தான் இது.
இந்த திரைப்படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்குனர். டி.கே.ராமமூர்த்தி என்பவரின் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.