காரில் நடந்த சம்பவம்.. இன்னல்களில் சிக்கிய பெண்.. நினைவுகளோடு வாழும் சில நேரங்களில் சில மனிதர்கள்
Sila Nerangalil Sila Manithargal: ஜெயகாந்தனின் நாவலின் மீது ஈர்ப்பு கொண்ட இயக்குனர் ஏ. பீம்சிங் இந்த கதையை திரைப்படமாக்க வேண்டும் என நினைத்துள்ளார். திரைக்கதை எழுதும் பணி எழுத்தாளர் ஜெயகாந்தனிடமே ஒப்படைக்கப்பட்டது.

பல நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி வெற்றி படங்களாக உருவெடுத்துள்ளன. பொதுவாக நாவல்களில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை திரைப்படம் ஆக்கி மக்களுக்கு இயக்குனர்கள் விருந்தாக்குவார்கள். அப்படி ஜெயகாந்தன் எழுதிய அக்னி பிரவேசம் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.
ஜெயகாந்தனின் நாவலின் மீது ஈர்ப்பு கொண்ட இயக்குனர் ஏ. பீம்சிங் இந்த கதையை திரைப்படமாக்க வேண்டும் என நினைத்துள்ளார். திரைக்கதை எழுதும் பணி எழுத்தாளர் ஜெயகாந்தனிடமே ஒப்படைக்கப்பட்டது. கமர்சியலாக இருக்கக்கூடிய அனைத்தையும் வெளியே தள்ளிவிட்டு திரைக்கதை எழுதினார் ஜெயகாந்தன்.
முதலில் இந்த திரைப்படத்தில் முத்துராமன் மற்றும் ஜெயலலிதா இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்தனர். அதற்குப் பிறகு ஜெயகாந்தன் விருப்பத்தின் பேரில் லட்சுமி மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் நடித்தனர்.