நிண்ட மனைவி எண்ட காதலி ஆக முடியாது சாரே.. சரித்திரமான அந்த 7 நாட்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நிண்ட மனைவி எண்ட காதலி ஆக முடியாது சாரே.. சரித்திரமான அந்த 7 நாட்கள்

நிண்ட மனைவி எண்ட காதலி ஆக முடியாது சாரே.. சரித்திரமான அந்த 7 நாட்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 26, 2023 05:01 AM IST

Andha 7 Naatkal: அந்த 7 நாட்கள் திரைப்படம் வெளியாகிய இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகின்றன.

அந்த 7 நாட்கள்
அந்த 7 நாட்கள்

என்னதான் பல கதைகள் சிறந்தவைகளாக இருந்தாலும் திரையில் காட்டப்படும் கதைக்கு தான் வெற்றி. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறந்த ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கக்கூடியவர் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ்.

திரைக்கதையை மக்களிடத்தில் எளிதாக சொல்வதற்கு இவருக்கு நிகர் இவர் மட்டும்தான். தமிழ் சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் இன்றுவரை தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஊடுருவி இருந்து வருகிறது.

அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றிணைந்து பயணிக்க கூடியது தான் இந்த தமிழ் சினிமா. ஒரு திரைப்படம் சாதாரணமாக அவ்வளவு எளிதில் மக்களை கடந்து விட்டு செல்லாது அனைவரும் உணர்வுக்கும் ஈடு கொடுத்து சென்றால் மட்டுமே திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றி அடையும்.

அந்த இடத்தை சரியாக கற்றுத் தேர்ந்தவர் இயக்குனர் பாக்யராஜ். சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள் என பல வெற்றிப் படங்களை மக்களிடத்தில் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படத்தை மக்களோடு மக்களாக வாழ வைத்தவர் தான் பாக்கியராஜ் அதுதான் அந்த ஏழு நாட்கள்.

வித்தியாசமான கதைகளை கொண்டு தொடங்குவதில் பாக்யராஜ் மிகவல்லவர். திரைப்படத்தின் தொடக்கமே திருமணத்தில் ஆரம்பமாகின்றது. அம்பிகா ஏற்கனவே திருமணமாகி குழந்தையோடு இருக்கும் ஒருவரை திருமணம் செய்யும் காட்சி தான் அது.

திருமண நேரத்தில் அம்பிகா மயக்கம் அடைந்து கீழே விழுகின்றார். என்ன காரணம் என நடிகர் ராஜேஷ் கேட்க, அப்படியே கதை பின்னோக்கி நகர்கிறது. சோகமான கதை களத்தில் இருந்து அப்படியே வேறு உணர்வுக்கு மாற்றுவது என்பது அவ்வளவு எளிதில் வெற்றி அடையாது. அதனை செய்து வெற்றியடைந்தவர் பாக்யராஜ்.

சினிமாவில் பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என ஆசைப்பட்டு கேரள மண்ணில் இருந்து சென்னை நோக்கி பாக்யராஜ் வருகிறார். கேரளாவைச் சேர்ந்த அம்பிகா தமிழ் பெண்ணாகவும, பாக்கியராஜ் மலையாளியாகவும் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்.

வாய்ப்பு தேடுவதற்காக அம்பிகாவின் வீட்டில் தங்குகிறார் பாக்யராஜ். அவர் பேசும் மலையாளமும் ஆங்காங்கே செய்யும் நகைச்சுவைகளும் மக்களை கதைக்குள்ளேயே வைத்திருக்கிறது. வீட்டில் இருக்கும் அம்பிகாவிற்கு பாக்யராஜ் மீது காதல் ஏற்படுகிறது.

பின்னர் கட்டாயத்தின் பேரில் இரண்டாவது காரமாக மருத்துவராக இருக்கக்கூடிய ராஜேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது. உடல்நிலை சரியில்லாத நிலையில் ராஜேஷின் தாயார் இருக்கின்ற காரணத்தினால் இந்த ஒரு வாரம் நீ என்னோடு இருந்தால் போதும் நான் உன் காதலனோடு உன்னை சேர்த்து வைத்து விடுகிறேன் என அம்பிகாவிற்கு உறுதிமொழி கொடுக்கிறார்.

வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் பாக்யராஜை கடைசியில் ராஜேஷ் கண்டுபிடிக்கிறார். நான் ஒரு திரைப்படம் எடுக்க போகிறேன் அதற்கு உங்களை இசையமைப்பாளராக நியமிக்கிறேன் என இவர்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை கதையாக பாக்யராஜிடம் ராஜேஷ் கூறுகிறார்.

திடீரென்று ராஜேஷுக்கு போன் வருகிறது எடுத்துப் பேசும் பொழுது அவருக்கு தாயார் இறந்து விட்டார் என செய்து கூறுகின்றனர் அனைத்து உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு இதே சூழ்நிலையை பாக்யராஜ் முன்னிலையில் நிற்கிறார். அந்த தாயார் இறந்து விட்டாரா என பாக்யராஜ் கேட்க, அவர் இறந்து விட்டார் என கூறுகிறார். கதைக்கு இதுதான் சரியாக இருக்கும் என பாக்கியராஜ் மகிழ்ச்சியோடு கூறுகிறார்.

இறுதியாக பாக்யராஜோட அம்பிகாவை சேர்த்து வைக்க ராஜேஷ் முயற்சி செய்யும்போது. அங்கு சொன்ன டயலாக் தான் இன்று வரை தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க்காக இருந்து வருகிறது. "என் காதலி உங்கள் மனைவியாகலாம் ஆனால் உங்கள் மனைவி எனது காதலி ஆக முடியாது" என்ற வசனம் நெத்திப்போட்டியில் அடிப்பது போல் படத்தை முடித்து வைக்கிறது.

இந்த சூழ்நிலையை மக்களிடத்தில் கொடுத்து இனம் புரியாத ஒரு உணர்வில் தத்தளிக்க வைத்திருப்பார் பாக்யராஜ். கூட்டம் கூட்டமாக வண்டி கட்டிக்கொண்டு பாக்யராஜ் திரைப்படத்திற்கு குடும்பத்தோடு சென்று பார்த்து இந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றியாக அனைவரும் மாற்றினார்கள். அம்பிகா மற்றும் பாக்யராஜ் இருவரும் சேர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் பொழுது இப்படி ஒரு பதிலை கூறி ரசிகர்களின் ஆசையை நிராசையாக மாற்றி வெற்றி கண்டார் பாக்யராஜ். தாலி சென்டிமென்ட் வைத்து மொத்த பெண் கூட்டத்தையும் தனது ரசிகர் கூட்டமாக மாற்றினார் பாக்யராஜ்.

திரைப்படத்தின் அடுத்த தூணாக விளங்கியது விஸ்வநாதனின் இசை. தேவையில்லாத பாடல்களை தவிர்த்து விட்டு எந்த இடத்திற்கு எந்த பாடல்கள் தேவையோ அதை மட்டும் சரியாக பாக்யராஜ் கொடுத்திருப்பார். கலவையாக அனைத்துமே இந்த திரைப்படத்தில் இருந்தாலும் குடும்பத் திரைப்படமாக பாக்யராஜ் இதனை மாற்றி வெற்றி கண்டார். திரைக்கதையின் ஒரு முன்னோடியாக இன்று வரை அந்த ஏழு நாட்கள் திரைப்படம் விளங்கி வருகிறது என்று கூறினால் அது மிக ஆகாது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.