Manithanin Marupakkam: சிக்கிய சிவக்குமார்.. அரைகுறையாக ராதா கொலை செய்தது யார்?..அசத்திய இளையராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manithanin Marupakkam: சிக்கிய சிவக்குமார்.. அரைகுறையாக ராதா கொலை செய்தது யார்?..அசத்திய இளையராஜா

Manithanin Marupakkam: சிக்கிய சிவக்குமார்.. அரைகுறையாக ராதா கொலை செய்தது யார்?..அசத்திய இளையராஜா

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 25, 2024 06:40 AM IST

Manithanin Marupakkam: நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமா பயணத்தில் மனிதனின் மறுபக்கம் திரைப்படத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அப்படி சிறப்பான திரைக்கதையை கொண்ட திரைப்படம் தான் இது. சரியான முறையில் இசையை வெளிப்படுத்தி இந்த படத்தை இளையராஜா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றுள்ளார்.

சிக்கிய சிவக்குமார்.. அரைகுறையாக ராதா கொலை செய்தது யார்?..அசத்திய இளையராஜா
சிக்கிய சிவக்குமார்.. அரைகுறையாக ராதா கொலை செய்தது யார்?..அசத்திய இளையராஜா

கதை

ஒரு தினசரி பத்திரிக்கையில் நிருபராக நடிகை ஜெயஸ்ரீ வேலைக்குச் செல்கிறார். தனது தோழியான சாரதாவுடன் ஜெயஸ்ரீ தங்குகிறார். சுஜாதாவின் சகோதரி தான் நடிகை ராதா. சிவகுமாரின் மனைவியான ராதா கொலை செய்யப்படுகிறார். சிவகுமார் தான் கொலை செய்தார் எனக் கூறி அவருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கட்டுரை வடிவாகத் தான் வேலை செய்யும் பத்திரிக்கையின் வெளியிட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

கதையைச் சற்று முன்னோக்கிப் பார்க்கும் பொழுது, நடிகர் சிவகுமார் ஒரு விளம்பர நிறுவனத்தின் முதலாளி. அவரின் நடிகை ராதா காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். விளம்பரத்திற்காக ராதாவை அரைகுறையாக ஆடை அணியச் சொல்லி சிவகுமார் கேட்கிறார்.

அதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அப்போது ராதா கர்ப்பம் ஆகிறார். அவரது கர்ப்பத்தின் மீது சந்தேகம் அடைந்த சிவக்குமார் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராதாவிற்குச் சாதகமாக வந்துவிடுகிறது.

அதன் காரணமாக சிவக்குமார் ராதாவைக் கொலை செய்ததாகக் கூறி அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனை நிறைவேற்றப்படும் சில நாட்களுக்கு முன்பு சிவகுமார் சிறையிலிருந்து தப்பித்து விடுகிறார்.

அப்போது மனைவி ராதாவின் சகோதரியான சுஜாதாவைச் சந்திக்க நேர்கிறது. அப்போதுதான் சிவக்குமார் கூறுகிறார் ராதாவை நான் கொல்லவில்லை என்று. ராதாவைக் கொலை செய்தது எனது நிறுவனத்தில் வேலை செய்யும் அர்ஜுன் தான். கொலை செய்யும் இடத்தில் நான் இருந்ததால் காவல்துறையினர் என்னைக் கைது செய்து விட்டனர்.

அந்த அர்ஜுனனைக் கொலை செய்வதற்காகவே நான் சிறையில் இருந்து தப்பித்தேன் எனக்கூறி சிவக்குமார் சென்று விடுகிறார். அதற்குப் பிறகு அர்ஜுனை சிவக்குமார் என்ன செய்தார் என்பதுதான் மீதி கதையாகும்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா 5 பாடல்கள் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான இந்த திரைப்படம் கடைசியில் தான் மிகப்பெரிய ட்விஸ்ட் உடைக்கப்படும். அதுவரை திரைப்படம் சாதாரணமாகப் பயணம் செய்யும். திரைப்படமும் அதன் பாடல்களும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமா பயணத்தில் மனிதனின் மறுபக்கம் திரைப்படத்திற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அப்படி சிறப்பான திரைக்கதையை கொண்ட திரைப்படம் தான் இது. சரியான முறையில் இசையை வெளிப்படுத்தி இந்த படத்தை இளையராஜா அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றுள்ளார். இயக்குநர் கே. ரங்கராஜ் அந்த அளவிற்கு நேர்த்தியாக இந்த திரைக்கதையை நகர்த்தி இருப்பார்.

இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகும் 38 ஆண்டுகளாகின்றன. கிளைம் திரில்லர் படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய உதாரணமாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.