En Thangachi Padichava: நடிப்பில் அசத்திய பிரபு.. பி.வாசுவின் வெற்றி கதை.. வசூலைக் குவித்த என் தங்கச்சி படிச்சவ..!
En Thangachi Padichava: என் தங்கச்சி படிச்சவ, 1988ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இந்தப்படத்தை இயக்கியவர் பி.வாசு. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் பிரபு, ரூபினி மற்றும் சித்ரா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
En Thangachi Padichava: என் தங்கச்சி படிச்சவ, 1988ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். இந்தப்படத்தை இயக்கியவர் பி.வாசு. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் பிரபு, ரூபினி மற்றும் சித்ரா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப்படம் 1988ம் ஆண்டு ஜீலை 15ம் தேதி வெளியானது. இந்தப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப்படம் தெலுங்கில் முடுல்லா மாவய்யா (1989) என்றும், இந்தியில் ஆஜ்கா அர்ஜீன் (1990) என்றும், கன்னடாவில் ரவிமாமா (1999) என்றும் வெளியானது.
கதை
தனக்கோடி என்பவர் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு சிறிய கிராமத்துக்கு மாற்றலாகி செல்கிறார். அங்கு கருணாகரன் என்ற ஒரு பெரும் நிழக்கிழார் இருக்கிறார். கிராம மக்களிடம் நிலப்பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார். பெரியசாமி கொலை குற்றத்திற்காக 5 ஆண்டுகள் ஜெயிலில் இருந்துவிட்டு அந்த கிராமத்திற்கு மீண்டும் திரும்பி வருகிறார். தனக்கோடி அந்த பணக்காரர் கருணாகரனை பிடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.
கதை ப்ளாஷ்பேக்குக்கு செல்கிறது. பெரியசாமியும், அவரது தங்கை லட்சுமியும் அனாதைகள். லட்சுமி நகரத்தில் சென்று படித்துவிட்டு ஊர் திரும்புகிறார். கருணாகரன் மகன் சின்னையாவும், வள்ளியும் காதலிக்கிறார்கள். லட்சுமியும், பெரியசாமி தங்கை லட்சுமியும் காதலில் விழுகிறார்கள். ஆனால் லட்சுமி கருணாகரனுக்கு எதிராகத்தான் இருக்கிறார். அவர்கள் இருவரும் பெரியசாமியின் உதவியுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
லட்சுமி கருவுற்றவுடன் சின்னையா காணாமல் போய்விடுவார். இதையடுத்து சின்னையா கருணாகரனின் வீட்டில் தான் இருப்பார். இது அவர்களின் திட்டம் என்று தெரிந்துவிடும். இதையடுத்து பெரியசாமியும், லட்சுமியும் நியாயம் கேட்க செல்கிறார்கள்.
அவர்களை அப்பாவும், பிள்ளையும் அடித்து துரத்துகிறார்கள். அப்போது லட்சுமியை கீழே தள்ளிவிடுகிறார் சின்னையா, இதில் லட்சுமி குழந்தையை பெற்றெடுத்திவிட்டு, இறந்துவிடுகிறார். இதையடுத்து ஆத்திரமடைந்த பெரியசாமி, சின்னையாவை கொல்கிறார். இதையடுத்து பெரியசாமி ஜெயில் செல்கிறார். கருணாகரனின் நிலை என்னவானது? பெரியசாமி, வள்ளி சேர்ந்தார்களா என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.
இந்தப்படத்தில் நாசர், மயில்சாமி, கிட்டி, ரவிக்கிரண், மோகன் நடராஜன், விக்னேஷ், ஆனந்த ராஜ், சுதா, குள்ளமணி உள்ளிட்ட பெரிய நட்சத்திரபட்டாளமே நடித்திருப்பார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமும் பொள்ளாச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், கலவையான விமர்சனத்தையும் பெற்றது. படத்தில் ப்ளாஷ்பேக் நன்றாக இருந்ததாக பத்திரிகைகளை பாராட்டின. தமிழ் சினிமாவில் அண்ணன், தங்கை பாசம் என்பது பாசமலர் காலம் முதல் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்று. தமிழகத்தில் அண்ணன், தங்கை பிணைப்பு பலமான ஒன்று. எனவே, இந்தப்படம் சென்டிமென்டாக அண்ணன், தங்கை பாசம் என்பதால் 100 நாட்கள் ஹிட் கொடுத்தது.
இந்தப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்து, பாடல்களை எழுதினார். படத்தின் பாடல்கள் எதிர்காலம் இனி, மாமான்னு சொல்ல ஒரு ஆளு, நல்லகாலம் பொறந்திருச்சு, பூவெல்லாம் வீதியில, சொந்த சுமைய தூக்கி, தூக்கி, சும்மா, சும்மா என்ன பாத்து என்ற பாடல்கள் ஹிட்டானது.
பாடல்களை டி.எம்.சௌந்தராஜன், ஜெயச்சந்திரன், சுசீலா, எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.பி., கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ்.சித்ரா, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் பாடியிருப்பார்கள். 36 ஆண்டுகள் கடந்தும் இந்தப்படம் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்