35 years of Rajathi Raja: ரஜினி நம்பாத கதை.. உச்ச வெற்றி பெற்ற ராஜாதி ராஜா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  35 Years Of Rajathi Raja: ரஜினி நம்பாத கதை.. உச்ச வெற்றி பெற்ற ராஜாதி ராஜா

35 years of Rajathi Raja: ரஜினி நம்பாத கதை.. உச்ச வெற்றி பெற்ற ராஜாதி ராஜா

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 04, 2024 06:45 AM IST

35 years of Rajathi Raja: நடிகர் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த ராஜாதி ராஜா படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆகிறது. ஆர்.சுந்தராஜன் இயக்கிய இப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா

கூச்ச சுபாவம் கொண்ட ரஜினிக்கு நதியா ஜோடி, தன் மாமாவிற்கு பயப்படும் ரஜினியை தைரியசாலியாக்குவார். அந்தக்காட்சிகள் முழுவதும் காமெடி பகுதியாக அமைந்திருக்கும். மற்றொரு ரஜினி பணக்காரராக இருப்பார். வெளிநாட்டில் இருந்து திரும்பும் அவர் தனது தந்தை இறந்ததையறிந்து, 

தனக்கு எதிராக நடக்கும் சதிதிட்டங்களை கண்டறிவதற்காக தன் வீட்டில் தனது நண்பரை தன்னைப்போல் நடிக்க வைப்பார். அப்போது சதிகாரர்கள் ரஜினியின் நண்பராக வரும் ஜனகராஜைக்கொன்று அந்தப்பழியை ரஜினி மீதே போடுவார்கள்.

இதனால், சிறை செல்லும் ரஜினி, உண்மையை கண்டுபிடிக்க சிறையிலிருந்து தப்புவார். அப்போது வழியில் தன்னைப்போல் உருவ ஒற்றுமை கொண்ட பயந்த சுபாவம் கொண்ட ரஜினியை சந்திக்கிறார். இந்த உருவ ஒற்றுமையை பயன்படுத்தி அவரை ஜெயிலுக்குள் இருக்க வைத்து உண்மையை கண்டுபிடிக்கிறார். 

தனது மாமா மகள் நதியாவை திருமணம் செய்துகொள்ள தேவைப்படும் பணத்திற்காக இந்த ஆள்மாறாட்டத்தை ஏற்றுக்கொண்டு சிறை செல்லும் பயந்த சுபாவி ரஜினியும் தனக்கு பணம் கிடைத்து தனது மாமன் மகளுடன் சேர்ந்துவிடுவார். ரஜினிக்கு உதவியாக வரும் எஸ்டேடில் உள்ள ராதா பணக்கார ரஜினியுடன் ஜோடி சேருவார். இதுவே படத்தின் கதை.

இளையராஜாவின் இசையில் இந்தப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே ஹிட். மீனம்மா…மீனம்மா….கண்கள் மீனம்மா, உன் நெஞ்சத்தொட்டு சொல்லு ஏன் ராசா, வா….வா…மஞசள் மலரே…ஒன்று…தா தா கொஞ்சும் குயிலே, மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவி என ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம். 

இன்று கேட்டாலும் இந்தப்பாடல்கள் இனிக்கும். அந்த காலத்தின் ஆர்கெஸ்ட்ராக்களில் இந்த பாடல்கள் குறிப்பாக மீனம்மா, மீனம்மா பாடல் இல்லாத கச்சேரிகளே இல்லையெனுமளவிற்கு மிகப்பிரபலமான பாடல்.

ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இந்த படத்தில் ராதாரவி, விஜய குமார், ஆனந்தராஜ் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். இப்படத்தின் கதையை முழுமையாக கேட்காமல் நடிக்க ஒத்துக்கொண்ட ரஜினி, இந்தப்படம் ஓடாது என்றே கருதினார். ஆனால், 

முதல் நாள் வசூலே பல லட்சங்களை தொட்டதுடன், 175 நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது. 35 ஆண்டுகள் கடந்து இன்று பார்த்தாலும் ராஜாதி ராஜா படம் பரவசத்தை ஏற்படுததும். அன்றும், இன்றும், என்றென்றும் ரஜினி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்தான் இந்த ராஜாதிராஜா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.