யாருக்காக போராடுகிறேன் என்று உங்களுக்கே தெரியல.. அடிமைகளுக்காக ஆயுதம் எடுத்த இரணியன்
24 Years of Iraniyan: இரணியன் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ் சினிமா எத்தனையோ கருத்துக்களையும், சமூக நீதிகளையும் எடுத்துரைத்து பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை வெகுஜன மக்களுக்கு வெளிப்படுத்திய சிறப்பு எப்போதுமே தமிழ் சினிமாவிற்கு உண்டு.
வரலாற்றுச் சம்பவங்களை எடுத்து கூறும் போது சினிமாவிற்கு ஏற்றார் போல் சில கற்பனைகளையும் சேர்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி உருவாக்கப்பட்ட சித்திரம் தான் இரணியன். இந்த திரைப்படம் அடிமைத்தனத்திற்காக போராடிய ஒரு ராணுவ வீரரின் கதை.
மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்டு வரும் சில தலைமைகள் பொதுமக்களை கொடுமைப்படுத்தி அடிமையாக வைத்திருந்தது ஒரு காலம். அதனை எதிர்த்து போராடிய எத்தனையோ வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் இந்த இரணியன்.
தன்னை எதிர்த்து பேசினால் அவர்களுக்கு கேவலமான தண்டனை கொடுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுவார்கள் என்று ஒரு ஆட்சியை நடத்தி வருகிறார் ரகுவரன். மேல் சட்டை அணியாமல் ஒரு வேட்டி ஒரு துண்டு இதனோடு ஏழை மக்களை தனக்கு முன்னால் அடிமை போல் நடத்தி வருகிறார்.
இதனைக் கண்ட இரணியன் தனது சக நண்பர்களோடு சேர்ந்து அந்த தலைமையை எதிர்க்கிறார். மக்களுக்காக போராடும் இரணியனை மக்களே இதற்கும் அளவிற்கு ரகுவரன் மாற்றுகிறார். பிழைப்புக்காக பஞ்சம் தேடி செல்லும் மக்களை இரணியன் தடுக்கும் போது அவர்களே தனக்காக போராடக் கூடியவரை கல்லால் அடிக்கின்றனர்.
மக்கள் கூடும் சூழ்நிலையை பயன்படுத்தி ரகுவரன் இரணியனை சுட்டுக் கொலை செய்கிறார். தங்கள் அடிமைகள் என ரகுவரனிடம் ஒப்பந்தம் கொடுத்து வாழும் மக்கள் கடைசியில் ஒன்று கூடி நிற்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியோடு இரணியன் இறக்கின்றார்.
இதில் கோபப்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ரகுவரனை விரட்டி துரத்தி அடிமைகளை எப்படி கொலை செய்வாரோ அதேபோல அவரையும் தூக்கில் ஏற்றி கொலை செய்கின்றனர். இரணியன் கதாபாத்திரத்தில் முரளி நடித்திருப்பார். மக்களை அடிமைப்படுத்தும் ஆண்டையாக ரகுவரன் நடித்திருப்பார்.
ரகுவரனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது ஒன்றுமில்லை. அவரை பார்க்கும் போது படத்தை பார்ப்பவர்களுக்கு பயம் வரும் அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடித்து இருப்பார்கள்.
இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் தேவா. படத்தில் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. உண்மையின் கதையை தழுவி எடுக்கப்பட்ட காரணத்தினால் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகின்றன. திரைப்படம் என்பதற்காக சில கேளிக்கை தொகுப்புகள் உள்ளே சேர்க்கப்பட்டாலும் சொல்ல வேண்டிய கருத்தை கட்டாயம் அந்த திரைப்படம் கூலியாக வேண்டும். இரணியன் திரைப்படத்தை பொருத்தவரை அந்த வேலையை சரியாக செய்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்