14 years of SMS : ‘ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு பீலிங் மச்சி’.. காதல், மோதல், காமெடியில் கலக்கிய சிவா மனசுல சக்தி!
14 years of Siva Manasula Sakthi : காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் சிவா மனசுல சக்தி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது. படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காமெடி தாண்டவம் ஆடியது.
90ஸ் கிட்ஸ்களுக்கு செம மாஸான படமாக வெளியானது சிவா மனசுல சக்தி. இந்தப் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது சந்தானம் காமெடி. யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக இன்றளவும் அமைந்துள்ளது.
காதல், காமெடி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது. படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காமெடி தாண்டவம் ஆடியது. ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி போன்றவர்கள் இந்தப் படத்தில் அசத்தி இருப்பார்கள்.
சிவா மனசுல சக்தி 2009ல் வெளிவந்த காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ஆர்யா சிறப்புத்தோற்றதில் நடித்தார். இயக்குனர் ராஜேசின் முதல் திரைப்படமாகும். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முன்னாள் உதவியாளரான அறிமுக இயக்குனர் எம். ராஜேஷ் எழுதி இயக்கிய படம்.
இப்படம் 13 பிப்ரவரி 2009 அன்று வெளியானது. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் அதிக வெற்றியைப் பெற்றது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஹீரோ, ஹீரோயின் இடையேயான மோதல், காதல் என அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும். முதல் காட்சியே ஜீவா, அனுயா ரயில் சந்திக்கும் காட்சி வைக்கப்பட்டிருக்கும். ஜீவா தன்னை ராணுவ வீரர் எனவும், அனுயா தன்னை விமானப் பணிப்பெண் என சொல்லியும் அறிமுகம் செய்வார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் கொரியர் டெலிவரி செய்யும் ஜீவாவும், ரேடியோவில் ஆர்ஜே ஆக பணியாற்றும் சக்தியும் சந்திக்க உண்மை வெளிப்படுகிறது. அதன் பின்னர் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தான் கதை. அதனை கலகலப்பாக சொல்லியிருப்பார் படத்தில் இயக்குநர்.
சிவாவாக வரும் ஜீவா - சக்தியாக வரும் அனுயா மோதல்கள் தான் படத்தின் ஹைலேட். அதற்கு படத்தின் வசனங்கள் மிகப்பெரிய அளவில் உதவியது. இதேபோல் சந்தானம் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்றே சொல்லாம். நண்பனால் ஏற்படும் பிரச்சனைகளை பொறுத்து அவரோடு எல்லா நிலையிலும் பயணிப்பதை ஜாலியாக அனைவரும் ரசிக்கும் வகையில் அமைத்து இருப்பார்கள்.
ஜீவா, அனுயா சண்டை, சத்யனுக்காக ரிஜிஸ்டர் ஆபீஸில் நடக்கும் சண்டை என அனைத்தும் காமெடி மோடில் பயணிக்கும். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மேஜிக் என்றே சொல்லலாம். இதில் இடம்பெற்ற ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் என்றைக்கும் காதலர்களின் சோககீதம் தான். இதேபோல தான் படத்தின் மற்ற பாடல்களும் அமைந்திருக்கும். டாஸ்மாக்கில் காதல் சொல்வது, கால் செய்வது, அலப்பறை பண்ணுவது என ஜீவாவும் இறங்கி அடித்த படம். ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு பீலிங் மச்சி என்று சொல்லி சொல்லியே, சந்தானத்தை வெறுப்பேற்றுவார் ஜீவா. அவரது அலட்டிக் கொள்ளாத நடிப்பு அந்தக் கேரக்டருக்கு மட்டுமில்லாமல் படத்திற்கும் கூடுதல் பலம் சேர்த்தது. படத்தை அதன் போக்கிலேயே இயல்பாக கொண்டு சென்று, இயல்பாகவே முடித்திருப்பார் ராஜேஷ். இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்