RIP Marimuthu: “சினிமாவுல ரொம்ப பிசி.. முடிவில் இழுபறி!” -எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க கூப்பிட்டது குறித்து மூர்த்தி!
சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் 30 ஆண்டுகள் வரை கடுமையாக உழைத்த மாரிமுத்துவை எதிர்நீச்சல் சீரியல் அவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து எதிர்பாராத விதமாக கடந்த செப்டம்பர் 8 ம் தேதி யாரும் உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் 30 ஆண்டுகள் வரை கடுமையாக உழைத்த மாரிமுத்துவை எதிர்நீச்சல் சீரியல் அவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
அவர் உயிரிழந்து விட்டதால், அந்தக்கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே இந்தக் கதாபாத்திரத்தில் எழுத்தாளர் மற்றும் நடிகர் வேலராம மூர்த்தி நடிக்கப்போகிறார் என்ற தகவல் பரவியது.
இந்த நிலையில் அவர் இது குறித்து சினிமா விகடன் இணையதளத்திற்கு அவர் பேசியிருக்கிறார். அவர் பேசும் போது, “என்னை ஆதி குணசேகரன் கேரக்டருக்கு அழைத்தது உண்மைதான். ஆனால் தற்போது நான் சினிமாத்துறையில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆகையால் சீரியலுக்கு நேரம் கொடுக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. அது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.” என்று பேசினார்.
டாபிக்ஸ்