Actor Kalabhavan Mani: நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடீர் டிவிஸ்ட்; விசாரணை அதிகாரி சொன்ன பகீர் தகவல்
நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்த விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ஜெமினி படத்தின் மூலம் பிரபலம் ஆனார், கலாபவன் மணி. அதில் இருந்து வேல், எந்திரன், ஏய், பாபநாசம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் கலாபவன் மணி நடித்து இருந்தார். இந்நிலையில் கேரள மாநிலம், திருச்சூர் - சாலக்குடியில் பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் 2016ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்துகிடந்தார், கலாபவன் மணி. நடிகர் கலாபவன் மணியின் ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் இருந்ததாக , நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவந்த விசாரணை அதிகாரி உன்னிராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து அதிகளவு பீர் குடித்ததால்,பீரில் இருந்த மெத்தில் ஆல்கஹால் மணியின் உடலில் அதிகளவு சேர்ந்துள்ளது எனவும், மெத்தில் ஆல்கஹால் என்பது டர்பென்டையின், பெயிண்ட் ஆகியவற்றினை அகற்ற பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எனவும், அந்த நச்சினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறினார்.
இதுகுறித்து விசாரணை அதிகாரி உன்னிராஜன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ’மணியின் ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் இருந்தது. இது குடிப்பதற்கு ஏற்றதல்ல. மெத்தில் ஆல்காஹலில் எத்தில் ஆல்கஹாலின் 90 விழுக்காட்டினைக் காணலாம். மெத்தில் ஆல்கஹாலின் உள்ளடக்கம் 100 மில்லி ரத்தத்தில் 30 மில்லிக்கு மேல் இருந்தால் அது ஆபத்தானது. மணியின் ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் மற்றும் சில பூச்சிக்கொல்லிகளின் தடயங்கள் இருந்தன. அவர் இறப்பதற்கு முன்பு, சில காலங்களாக சாராயம் காய்ச்சுபவரிடம் வாங்கி மது அருந்தியுள்ளார். மெத்தில் ஆல்கஹாலை தொடர்ந்து உட்கொள்வதால் பார்வைக்குறைபாடு ஏற்படும். அவர் இறப்பதற்கு முன்பு பீர் மட்டும் குடித்துள்ளார். மேலும் அவர் ஒரு நாள்பட்ட நீரிழிவு நோயாளி ஆவார். அதேபோல் கலாபவன் மணி சரிவர மருந்து மாத்திரைகளை எடுக்கவில்லை.
மணியின் கல்லீரலும் பழுதுபட்டு இருந்தது. ரத்த வாந்தி எடுத்தாலும் பீர் குடித்து வந்தார். மணி நாளொன்றுக்கு 12-13 பாட்டில்கள் பீர் குடித்தார். மணி குடித்த பீர் பாட்டிலில் மெத்தில் ஆல்கஹால் கண்டறிந்து இருப்பது கண்டறியப்பட்டது. மணியின் பீர் பாட்டில்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எங்களது முடிவை தான் சிபிஐ-யும் கண்டறிந்தது. ஆனால், மணி தனது மரணம் குறித்து அறிந்தே இதை செய்தார் என்பதே உண்மை’ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.