Anuja Reddy: ‘அத்தனை பேர் முன்னாடி ஓப்பனா நிக்கனும்’ -90s அனுஜா ரெட்டி வேதனை!
Actress anuja reddy‘ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு கூட்டம் இருக்கும். எங்கள் ஆடையை பார்த்து கிண்டல் செய்வார்கள். வருத்தமாக இருக்கும். எங்கள் நிலையை புரிந்து கொள்ள மாட்டார்கள்’
சின்னதம்பி, சேரன்பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்த கவர்ச்சி நடிகை அனுஜா ரெட்டியை 90ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த அளவிற்கு கவர்ச்சி கடலில் நீந்த வைத் அனுஜா, சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அனுஜா பகிர்ந்த சுவாரஸ்ய விசயங்கள் இதோ:
‘‘கவுண்டமணி சாருடன் 3 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். செட்டில் அவர் அனைவரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பார். சின்னதம்பி படத்தில் அவருக்கு மாலை கண் வியாதி இருக்கும். ஒரு காட்சியில் என்னை தண்ணீரில் அப்படியே விட்டு விடும் காட்சி. கீழே கல் இருந்தது. அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் என்னை கீழே போட்டு விட்டார்.
வடிவேல் சார் அப்படியே கவுண்டமணி சாருக்கு அப்போசிட். வடிவேலு யாரையும் கிண்டல் செய்ய மாட்டார். நான் 14 வயதில் சினிமாவுக்கு வந்தேன். கோடம்பாக்கத்தில் நான் இருந்தேன். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ஒரு பெண்ணை பார்க்க வந்தவர்கள், என்னை சினிமாவில் புக் பண்ணிவிட்டார்கள்.
அப்படி தான் நடித்தேன். 4 ஹீரோயின்கள் அதில். அதில் நானும் ஒரு ஹீரோயின். எனக்கு 14 வயது என்பதால், எனக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் அதன் பின் நடிக்க மறுத்துவிட்டேன். அதன் பின் டான்ஸ் பழகினேன். பூக்களை பறிக்காதீர்கள் படத்தில் கேட்டார்கள். நான் மாட்டேன் என்று கூறிவிட்டேன். எனது நடன மாஸ்டர் திட்டி என்னை அனுப்பினார்.
கொடைக்கானலில் ஷூட்டிங் முடித்து சென்னை வந்ததும், முதல் வசந்தம் படம் கிடைத்தது. இரண்டுமே ஹிட் ஆனது. அதற்கு அப்புறம் படங்கள் வரத் தொடங்கியது. குடும்ப சூழலிலும் நான் சினிமாவுக்கு வரவில்லை, விருப்பப்பட்டும் நான் சினிமாவிற்கு வரவில்லை. வாய்ப்பு வந்தது, நான் நடித்தேன்.
எனக்கு கிளாமர் வாய்ப்புகள் தான் அதிகம் வந்தது. அப்போது ஹீரோயின்கள் முழு ஆடையில் இருப்பார்கள். அதனால் கிளாமருக்கு ஒரு பாடல் வைத்து, எங்களை ஆட வைப்பார்கள். எல்லாரும் ஒரு ஆடை அணிந்திருக்க, நாங்கள் மட்டும் கிளாமர் ஆடை அணிந்து நிற்போம். அது ஒரு மாதிரி தான் இருக்கும். ஆனாலும் ஒத்துக்கொண்ட விசயம் என்பதால் செய்து தான் ஆகனும்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு கூட்டம் இருக்கும். அவர்கள் அத்தனை பேர் முன்னாடி அறைகறை ஆடையோடு ஓப்பனா நிற்கனும். எங்கள் ஆடையை பார்த்து கிண்டல் செய்வார்கள். வருத்தமாக இருக்கும். எங்கள் நிலையை புரிந்து கொள்ள மாட்டார்கள். அதுவும் ஓரு வேலை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் பார்வை வேறு விதமாக இருக்கும். அவுட்டோரில் அந்த கூட்டத்திற்கு முன் தான் ஆடி ஆகணும்.
தொடர்ந்து மூன்று நான்கு படங்கள் ஹிட் ஆகியதும் எதுவும் செய்யலாம் என்று தான் எனக்கு தோன்றியது. எல்லா கிளாமர் நடிகையும் கேலிகளை நினைத்தால் நடிக்கவே முடியாது. ஒரு பாடலில் ஆடினாலும், ஹீரோயினுக்கு ஏற்றவாறு மதிப்பு இருந்தது. காரணம், அந்த படத்திற்கு கிளாமர் நடிகைகள் பங்களிப்பு முக்கியமாக இருந்தது.
நான் வருவதற்கு முன் மாதவி மேடம் டிக் டிக் டிக் படத்தில் எந்த ஹீரோயினும் போடாத ஆடைகளை அணிந்திருந்தார்.கிளாமருக்கு அந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது. கொஞ்சம் மாறலாம் என நினைத்து நடனத்தில் கவனம் எடுத்து 6 மாதம் ப்ரேக் எடுத்தேன். அதன் பின் தான் காமெடிக்கு வந்தேன். அதன் பின் அந்த பிரச்னை எதுவும் எனக்கு வரவில்லை.
சினிமாவில் வரும் போதே ஹீரோயினாக வந்தால் அப்படியே தொடரலாம். கிளாமர் டான்ஸிற்கு வந்த பின் ஹீரோயின் ஆக முடியாது. இயக்குனர், தயாரிப்பாளர், மக்கள் யாராக இருந்தாலும், கவர்ச்சி காட்சி என்றால், கவர்ச்சி நடிகைகளை மட்டும் தான் அழைப்பார்கள். வேறு கதாபாத்திரத்தில் அவர்களை வைத்து பார்க்க மாட்டார்கள்.
எங்கள் காலத்தில் கிசுகிசு வந்தால் சந்தோசப்படுவோம். கிசுகிசு வந்தால் பிரபலமாகலாம் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கும். வருத்தமளிக்கும் கிசுகிசு அப்போது வராது. ரசிகன் படத்தில் விஜய் சாருடன் பம்பாய் சிட்டி பாடலில் ஆடினேன். பெரிய இயக்குனரின் மகன், பெரிய ஆளாக வர வைப்பார் என்று நினைத்தேன். விஜய் ரொம்ப அமைதியானவர்.
என்னுடைய பாடல்களை பார்த்தால், பழைய நியாபகங்கள் தான் எனக்கு வரும். அப்போ உள்ள படத்தில் கிளாமர் தனியாக இருக்கும். அதுவும் ஒரு எல்லையில் இருக்கும். இப்போது ஹீரோயின்களே கிளாமராக தான் இருக்கிறார்கள். ஃபேஷன் ட்ரெண்டாகிவிட்டது. கிளாமரே வழக்கமாகிவிட்டது. கிளாமர் கேரக்டர் என்று தனியாக இப்போது யாரையும் போடுவதில்லை,’’
என்று அனுஜா ரெட்டி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்