Amy Jackson: ‘சோம்பலான மழைக்கால காலை’.. நட்சத்திர ஹோட்டலில் புது காதலருடன் எமி ரொமன்ஸ்! - வைரல் போட்டோக்கள்!
எமி ஜாக்சன் தன்னுடைய காதலனுடன் ராஜஸ்தான் உதய்பூரில் ஜாலியாக சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

Amy Jackson
தமிழில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனைத்தொடர்ந்து ‘தாண்டவம்’ ‘ஐ’ ‘கெத்து’ ‘தெறி’ ‘2.0’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அருண் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த இவர் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2020 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனிடையே இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
அதன் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை, எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜ் உடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்தார். இதனையடுத்து இருவரும் பிரிந்தது உறுதிசெய்யப்பட்டது.