Thani Oruvan 2: தனி ஒருவன் 2: இசையமைப்பாளர் குறித்த முக்கிய அப்டேட்!
தனி ஒருவன் 2 படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தனி ஒருவன் 2 படத்தின் இசையமைப்பாளர் மற்றும் வில்லன் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் தான், தனி ஒருவன்.
இந்நிலையில் தனி ஒருவன் 2 குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்தப் படத்தில் இப்போதைக்கு நடிகர் ஜெயம் ரவியும், நயன்தாராவும் மட்டுமே நடிப்பதாக கன்ஃபார்ம் ஆகியுள்ளனர். மற்ற எந்த நடிகர்களும் கன்ஃபார்ம் ஆகவில்லை.
இப்படத்தையும் கல்பாத்தி அகோரம் சகோதரர்களின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், இப்படத்திற்கான துவக்க புரோமோவிற்கான இசையை சாம் சி.எஸ். செய்திருந்தார். அதனால், ஹிப்ஹாப் தமிழாவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து, அந்த வீடியோ முழுக்க கமெண்ட் செய்திருந்தனர். குறிப்பாக, ஹிப்ஹாப் தமிழாவின் இசை இல்லாமல் தனி ஒருவனுக்கு இவ்வளவு பெரிய ஹிட் கிடைக்க வாய்ப்பில்லையென்றும்; தனி ஒருவனாக தனது இசைமூலம் இப்படத்தைக் கட்டி இழுத்தார் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர்.
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஹிப்ஹாப் தமிழாவிடம், தனி ஒருவன் 2 படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும்; கிட்டத்தட்ட அவரே இப்படத்தில் இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் புரோமோவில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தினை தேடி, ஜெயம் ரவி என்னும் மித்ரன் புறப்படும்போது, தனி ஒருவன் 2வில் வில்லன் தான், மித்ரனை தேடி வருவார் என குறிப்பு உரைக்கிறார், படத்தின் இயக்குநர் மோகன் ராஜா.
இதனால் தனி ஒருவன் 2வில் நடிக்கப்போகும் முக்கிய வில்லன் குறித்த எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. அதனால்,பிற மாநிலத்தைச் சார்ந்த ஒரு முக்கிய நடிகரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடிகர் ஜெயம் ரவி ஜீனி படத்திலும், காதலிக்க நேரமில்லை படத்திலும் நடித்து வரும் நிலையில், அதன்பின், அடுத்தாண்டு தனி ஒருவன் 2 படத்தின் சூட்டிங்கில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்