‘கம்போசிங் கேன்சல் செய்தவர் ராஜா’ குழல் இசைக்கலைஞர் நவீன்குமார் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘கம்போசிங் கேன்சல் செய்தவர் ராஜா’ குழல் இசைக்கலைஞர் நவீன்குமார் பேட்டி!

‘கம்போசிங் கேன்சல் செய்தவர் ராஜா’ குழல் இசைக்கலைஞர் நவீன்குமார் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Apr 15, 2023 06:30 AM IST

Flautist Naveen Kumar: 7 மணிக்கு வருவார், ஆர்மோனித்தை தட்டி, ‘வா வா…’ என்பார். அவர் அழைக்கும் சமயம், நாங்கள் எல்லாரும் தயாராக இருப்போம். அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் அவரது பணி.

புல்லாங்குழல் இசைக்கலைஞர் நவீன் குமார் மற்றும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்
புல்லாங்குழல் இசைக்கலைஞர் நவீன் குமார் மற்றும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்

‘‘ராஜா சாரிடம் 1984 ல் வாய்ப்பு கிடைத்தது. நானும் அண்ணனும் சவுத் டூர் வந்த போது, எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘வாசிக்கிறீயா? படிக்கிறீயா?’ என்று ராஜா சார் கேட்டார். ‘எனக்கு படிக்க விருப்பமில்லை சார், வாசிக்கிறேன்’ என்று கூறினேன். தாவணிக் கனவுகள் தான் என்னுடைய முதல் படம். 

அதன் பின் மைடியர் குட்டிசாத்தான், வைதேகி காத்திருந்தால் என பல படங்கள். 3 ஆண்டுகள் அவரிடம் பணியாற்றியிருக்கிறேன். இரண்டாவது புல்லாங்குழல் கலைஞராக அவரிடம் இருந்தேன். சில சமயங்களில் முன்னணி புல்லாங்குழல் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறேன். 

‘ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ பாடல் ரிக்கார்டு செய்து கொண்டிருந்தார். அப்போது, இன்று மாதிரி டிராக் சிஸ்டம் கிடையாது. எல்லா கலைஞர்களும் வாசித்துக் கொண்டிருந்தோம். 7 மணிக்கு வருவார், ஆர்மோனித்தை தட்டி, ‘வா வா…’ என்பார். அவர் அழைக்கும் சமயம், நாங்கள் எல்லாரும் தயாராக இருப்போம். அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் அவரது பணி.

அவரிடம் சேர்ந்த பின் என் தங்கைக்கு திருமணம் வந்தது. அவரிடம் சொல்லிவிட்டு, ஊருக்கு புறப்பட்டு விட்டேன். நான் ஆந்திரா என்பதால் எனக்கு தமிழ் தெரியாது. திருமணம் முடிந்து, மீண்டும் பணிக்கு திரும்பி பிரசாந்த் லேப் வந்தேன். எல்லாரும் ஒரு மாதிரி என்னை கிண்டல் செய்வதைப் போல எனக்குத் தோன்றியது. அது மொழி பிரச்னையாக கூட இருந்திருக்கலாம். ஒரு மாதிரி இருந்ததால், வேலை வேண்டாம் என வீட்டுக்கு வந்துவிட்டேன். வேலைக்கு போவதில்லை என அம்மாவிடமும் கூறிவிட்டேன்.

பார்த்தால், என் பக்கத்து வீட்டுக்கு போன் வருகிறது. ‘நான் வராததால் கம்பேசிங்கை ராஜா சார் கேன்சல் பண்ணிட்டார்’. கேட்டதும் எனக்கு ஒரே ஷாக். உடனே கிளம்பி போய்டேன். ராஜா சார் மாதிரி ஒரு இசையமைப்பாளரை பார்க்கவே முடியாது. இன்றும் நான் அவரின் ரசிகன். 

அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றினேன். அவர் இரவில் தான் கம்போசிங் வைப்பார். நான் பகலில் பலரிடம் வாசித்துவிட்டு, இரவில் அவரிடம் வந்துவிடுவேன். இரவு முழுக்க பணியாற்றுவோம். பம்பாய் கம்போசிங் அப்போ, மழை துளி இலை மீது படுவது போன்று புல்லாங்குழல் இசை வேண்டும் என்றார். அதை தான் தீம் மீயூசிக்காகவும் வைத்தார். அந்த அளவிற்கு ரசனையானவர்,’’
என்று அந்த பேட்டியில் நவீன் குமார் கூறியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.