Indian 2 Release: முழுவீச்சில் தயாராகும் இந்தியன் 2 ரிலீஸ்.. ப்ரீ புக்கிங் எத்தனை கோடி வசூல் தெரியுமா?
Indian 2 Release: இந்தியன் 2 படத்தின் வெளிநாட்டில் ப்ரீபுக்கிங்கில் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முழுவீச்சில் தயாராகும் இந்தியன் 2 ரிலீஸ்.. ப்ரீ புக்கிங் எத்தனை கோடி வசூல் தெரியுமா
கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகா்வால், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து உள்ளனா்.
லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, சென்னை, ராஜமுந்திரி, போபால், குவாலியர் போன்ற பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. இதன் படப்பிடிப்புக்கு மத்தியில், பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு படக்குழுவில் ராட்சத கிரேன் விழுந்ததில் சிலர் உயிரிழந்தனர்.