Indian 2 Box office: முதலுக்கே மோசம்.. கழுவி ஊற்றும் மக்கள்..திணறும் பாக்ஸ் ஆபிஸ் இந்தியன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?
இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ்: கடந்த சில நாட்களாக படத்தின் வருவாய் சரிவைக் கண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் இந்தியன் 2 திரைப்படம் வசூல் செய்த தொகை இவ்வளவுதான்!

Indian 2 Box office: முதலுக்கே மோசம்.. கழுவி ஊற்றும் மக்கள்..திணறும் பாக்ஸ் ஆபிஸ்.. இந்தியன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வசூலில் மேலும் சரிவை சந்தித்துள்ளது.
Sacnilk.com தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, இந்தியாவில், இந்தியன் 2 திரைப்படம் தோராயமாக, வெறும் 72 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறது.
இந்தியன் 2 உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன?
இந்தியன் 2 திரைப்படம், முதல் வாரத்தில், தமிழில் 48.7 கோடி ரூபாயை வசூலித்தது. இந்தியில் 5.4 கோடி ரூபாயும், தெலுங்கில் 16.3 கோடி ரூபாயையும், வசூல் செய்தது. படம் வெளியாகி நேற்றோடு 8 நாட்கள் ஆகி உள்ள நிலையில், நேற்றைய தினம் இந்தியன் 2 திரைப்படம், வெறும் 1.15 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது.