தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ileana Shares About Her Boy Friend Love And Care

Ileana: பார்ட்னர் மைக்கேல் எப்படிப்பட்டவர்? - உருகி பேசிய இலியான

Aarthi V HT Tamil
Jan 05, 2024 01:25 PM IST

இலியானா டி குரூஸ் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு பற்றி மனம் திறக்கிறார்.

இலியானா
இலியானா

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது மைக்கேல் டோலன் மற்றும் குழந்தை கோ ஃபீனிக்ஸ் டோலனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 'மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மிகவும் உண்மையானது' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார். 

தனது திருமணத்தை பற்றிய அனைத்து ஊகங்களுக்கும் பதிலளித்த இலியானா, தன்னைப் பற்றி கூறப்படும் விஷயங்களை ‘கையாள முடியும்’. ஆனால் தனது கூட்டாளர் அல்லது அவரது குடும்பத்தைப் பற்றி மக்கள் தவறாகப் பேச வேண்டாம் " என்று கூறினார். 

இலியானா கூறுகையில், " மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மிகவும் உண்மையானது, அதற்காக எதுவும் உங்களைத் தயார் செய்ய முடியாது. எனக்கு வீட்டில் ஒரு நல்ல ஆதரவு அமைப்பு மற்றும் என்னை நன்கு கவனித்துக் கொண்ட மருத்துவர்கள் குழு இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். 

நான் என் அறையில் இருந்ததை நான் நினைவில் வைத்திருக்கிறேன், நான் அழத் தொடங்கினேன். என் பார்ட்னர் என்னிடம் என்னவானது என்று கேட்டார், நான் அவரிடம் சொன்னேன், 'இது மிகவும் முட்டாள்தனமானது என எனக்குத் தெரியும், ஆனால் என் மகன் மற்றொரு அறையில் தூங்குகிறான், நான் அவனை மிஸ் செய்கிறேன்'. 

ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு நீங்கள் அனுபவிக்கும் இந்த தீவிரமான உணர்ச்சிகள் உள்ளன. நான் இன்னும் அதை கடந்து வருகிறேன். மைக் (மைக்கேல் டோலன்) ஒரு அற்புதமான பார்ட்டனராக இருப்பதற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். நான் அவருக்கு விஷயங்களை விளக்க வேண்டிய அவசியமில்லை. அவர் என்னை ஓய்வு எடுக்கச் செய்து, நான் மீண்டும் எழுந்து வரும் முன்பு குழந்தையை கவனித்துக் கொள்கிறார்."

இன்ஸ்டாகிராமில் தாய்மை குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்து வரும் அவர், தனது துணையை பற்றி அதிகம் பேசவில்லை. மைக்கேல் டோலனை 2023 மே மாதம் திருமணம் செய்து கொண்டது குறித்து இலியானா டி குரூஸிடம் கேட்டபோது, "நிறைய ஊகங்கள் உள்ளன. அதை அப்படியே விட்டுவிடுவோம். ஒரு சிறிய மர்மம் இருப்பது நல்லது, இல்லையா? 

சரி, நேர்மையாக, என் வாழ்க்கையின் இந்த பகுதியைப் பற்றி நான் எவ்வளவு பேச விரும்புகிறேன் என்பதை நான் தீர்மானிக்கவில்லை. இது முன்பு நான் என் உறவைப் பற்றி பேசிய இடத்திலிருந்து வருகிறது. அப்போது இதைப் பற்றி சிலர் பேசிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. என்னைப் பற்றிச் சொல்லப்படும் விஷயங்களை என்னால் கையாள முடியும், ஆனால் என் பார்ட்டனர் அல்லது என் குடும்பத்தைப் பற்றி மக்கள் தவறாகப் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார்.

நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலை இலியானா காதலிப்பதாக முன்பு கிசுகிசுக்கப்பட்டது. விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோருடன் இருவரும் மாலத்தீவில் விடுமுறையைக் கழித்த பிறகு, இந்த ஜோடியைப் பற்றிய டேட்டிங் வதந்திகள் பரப்பப்பட்டன.

இலியானா இதற்கு முன்பு புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ மோனிபோனுடன் நீண்டகால உறவில் இருந்தார். 2019 ஆம் ஆண்டில், இலியானா அவர்கள் பிரிந்த பிறகு சிகிச்சை பெற்றதாக கூறியிருந்தார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.