தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ilayaraja Biopic: Savukku Shankar Throwback Interview About Ilayaraja Negative Face

Ilayaraja: ‘அற்பமான மனிதர்.. சுயநலமி.. அப்படி என்ன கிழிச்சிட்டாரு?’ -ராஜாவை பொளந்த பிரபலம்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 21, 2024 09:28 AM IST

‘இளையராஜா எந்த அளவுக்கு ஒரு அற்பமான மனிதர் என்பதை சொல்கிறேன். எஸ் பி பாலசுப்பிரமணியம் வெளிநாடுகளில் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். டிக்கெட்டெல்லாம் விற்பனையாகி விட்டது. ஆனால் அதற்கிடையில்’ - சவுக்கு!

இளையராஜா!
இளையராஜா!

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில், பிரபல விமர்சகரான சவுக்கு சங்கர் இளையராஜா குறித்து ஆதன் தமிழ் சேனலுக்கு முன்பு அளித்த பேட்டியும் அடக்கம். அந்த பேட்டியை இங்கு பார்க்கலாம். 

அவர் பேசும் போது, “இளையராஜா எந்த அளவுக்கு ஒரு அற்பமான மனிதர் என்பதை சொல்கிறேன். எஸ் பி பாலசுப்பிரமணியம் வெளிநாடுகளில் கச்சேரி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். டிக்கெட்டெல்லாம் விற்பனையாகி விட்டது. 

இந்த இசை பயணம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னவர் இளையராஜா. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா... இவர் என்ன அப்படி தன்னுடைய தமிழ் சமூகத்திற்கு செய்துவிட்டார். பணம் வாங்கிக்கொண்டு நல்ல இசையை இந்த சமூகத்திற்கு கொடுத்திருக்கிறார். தேவா கூடத்தான் அவ்வளவு அழகான பாடல்களை கொடுத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இளையராஜாவை விட நல்ல குத்து பாடல்களை தேவா கொடுத்திருக்கிறார். 

பாடல்கள் அனைத்தும் ஹிட்டானதால் உடனே இளையராஜாவை நாம் என்ன கடவுளாக பார்க்க வேண்டுமா என்ன?. ஏ ஆர் ரஹ்மான் வரும் வரை பின்னணி இசைக் கலைஞர்கள் யாருமே அங்கீகரிக்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா...? இளையராஜா இருந்தவரை யாரெல்லாம் பாடகர்கள் இருந்தார்கள் யோசித்து பாருங்கள். அவரது காலத்தில் எஸ்பிபி, மனோ, ஜானகி, சித்ரா, சுவர்ணலதா இவர்களைத் தாண்டி யாராவது அவரது  பெரிய பாடகர்களா இருந்திருக்கிறார்களா சொல்லுங்கள்... 

ஏ ஆர் ரஹ்மான் எத்தனை பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆவரது ஆல்பத்தில் எல்லோருடைய பெயரும் இருக்கும். இளையராஜா அதை செய்தாரா? 

இந்தச் சமூகத்திற்கு இளையராஜா என்ன அப்படி கிழித்து விட்டார்? இவர் நம்முடைய ஆள் என்று சொல்வதற்கு இதில் என்ன இருக்கிறது. அவர் காசு வாங்கிக்கொண்டு இசையமைக்கிறார் அவ்வளவுதான். 

அவர் ஒரு சுயநலமி, ஏ ஆர் ரகுமான் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதை பெற்றார். அந்த விருதை வாங்கிக் கொண்ட  திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு எனக்கு இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று அன்பு; இன்னொன்று வெறுப்பு. நான் அன்பை தேர்ந்தெடுத்தேன். இங்கே வந்து நிற்கிறேன். இதுதான் உண்மையிலேயே பண்பு...

ஒருமுறை ஏ ஆர் ரஹ்மான் தமிழ் சினிமா இசைக்குள் டெக்னாலஜிகளை நுழைக்க முயற்சி எடுத்து வெளிநாட்டில் இருந்து ஒரு இசைக்கருவியை இங்கே வரவைக்கிறார். இப்போது பெரிதாக கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் அப்போது கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. இதற்கிடையே இளையராஜா தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த இசைக் கருவியை கிட்டத்தட்ட ஒரு வருடம் வெளியே வராதபடி பார்த்துக் கொண்டார். இளையராஜாவிடம் ரஹ்மான் பாட்டை கேட்டீர்களா என்று கேட்டால், கேட்கவில்லை என்று சொன்னார். ஆனால் இளையராஜாவின் திருவாசக வெளியீட்டில் ஏ ஆர் ரகுமான் கலந்து கொண்டார்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்