AAA Cinemas: தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ‘ஏஏஏ சினிமாஸ்’-icon star allu arjuns aaa cinemas opening ceremony was grand - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aaa Cinemas: தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ‘ஏஏஏ சினிமாஸ்’

AAA Cinemas: தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ‘ஏஏஏ சினிமாஸ்’

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 15, 2023 04:00 PM IST

தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ மட்டுமே. இதற்கு புரொஜக்‌ஷன் தேவையில்லை. அதனால், திரையிடல் மிகவும் தெளிவாக இருப்பதோடு சிறப்பான திரை அனுபவத்தையும் தரும்.

ஏஏஏ சினிமாஸ்
ஏஏஏ சினிமாஸ்

மிகப் பிரமாண்டமான முறையில் தனது ’ஏஏஏ சினிமாஸ்'ஸை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் திறந்து வைத்தார். அல்லு அர்ஜுன் ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து 'ஏஏஏ சினிமாஸ்'ஸை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சுனில் நரங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது தங்களுக்குப் பிடித்த நட்சத்திரமான அல்லு அர்ஜுனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

சுனில் நரங் கூறுகையில், ''ஏஏஏ சினிமாஸுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். இந்த வளாகத்தின் மொத்த பரப்பளவு மூன்று லட்சம் சதுர அடி. மூன்றாவது தளத்தில் உணவு விடுதி 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. ஏஏஏ சினிமாஸின் நான்காவது மாடியில் ஐந்து திரைகளுடன் கூடிய திரையரங்கு உள்ளது. திரை எண் 2 இல் LED திரை உள்ளது.

தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ மட்டுமே. இதற்கு புரொஜக்‌ஷன் தேவையில்லை. அதனால், திரையிடல் மிகவும் தெளிவாக இருப்பதோடு சிறப்பான திரை அனுபவத்தையும் தரும். 67 அடி உயரம் மற்றும் ATMOS ஒலியுடன் கூடிய பார்கோ லேசர் புரொஜெக்ஷனை ஸ்கிரீன்-1 கொண்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய திரை இது. இங்கு ஒலியின் தரம் உலகத்தரம் வாய்ந்தது. லாபி மிகவும் ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்'' என்றார்.

அல்லு அரவிந்த் கூறுகையில், “’ஏஏஏ சினிமாஸ்’ உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. சுனில் நரங் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வடிவமைத்துள்ளார். தென்னிந்தியாவில் எல்இடி திரை கொண்ட ஒரே மல்டிபிளக்ஸ் ’ஏஏஏ சினிமாஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு டீம் வொர்க் மற்றும் சுனில் நரங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏஏஏ சினிமாஸை மிக பிரமாண்டமாக அமைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்” என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.