Director Shankar: ‘அவர் எனக்கு அப்பா மாதிரி.. அவர எப்போதுமே’ - சுஜாதாவை நினைத்து உருகிய ஷங்கர்!
Director Shankar: படத்தில் ஒவ்வொருவருக்கும் பலமான, அழுத்தம் தரக்கூடிய கதாபாத்திரங்களே அமைந்து இருக்கின்றன. அந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகைகள், அவர்கள் பாணியில் அவரது கதாபாத்திரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். -ஷங்கர்
சமீப நாட்களாக எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றியும், அவருடன் ஷங்கர் பணியாற்றிய விதம் பற்றியும், சமூக வலைதளங்களில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. காரணம் அவர்கள் இணைந்து கொடுத்த படங்கள், அந்த வகையைச் சார்ந்தவை. இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து ஜென்டில்மேன், காதலன், இந்தியன் மற்றும் எந்திரன் (ரோபோ) போன்ற படங்களில் இணைந்து கதை மற்றும் வசனங்களில் முக்கிய பங்கு வகித்தார். அவற்றுடன் ஷங்கரின் பிரமாண்டமும் சேரும் போது, படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றன.
எனக்கு அவர் அப்பா போன்றவர்
இந்த நிலையில் சுஜாதா மறைந்த பின்னர் ஷங்கரால் முன்னர் போன்று படங்களை எடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் அண்மையில் நீங்கள் சுஜாதாவை மிஸ் செய்கிறீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷங்கர் நிச்சயமாக.. அவர் எனக்கு அப்பா போன்றவர். அவர் என்னை எப்போதும் ஒரு மகனை போலத்தான் நடத்தினார். அவரை எப்போதுமே நான் மிஸ் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று பேசினார்.
1996 -ல் இந்தியன் திரைப்படம் வெளிவந்ததிலிருந்து, சினிமா எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்தும், மைய கதாபாத்திரங்களில், கதாநாயகர்களுக்கு நிகராக கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, இந்தியன் 2 படத்தில் கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் எந்தளவில் இருகஎன்பது குறித்தும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஷங்கர், “ படத்தில் ஒவ்வொருவருக்கும் பலமான, அழுத்தம் தரக்கூடிய கதாபாத்திரங்களே அமைந்து இருக்கின்றன. அந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகைகள், அவர்கள் பாணியில் அவரது கதாபாத்திரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். காஜல் அகர்வால் இந்தியன் 3 பாகத்தில் வருவார்” என்று பேசினார்.
இந்தியன் 2 எப்படி உருவானது?
இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்க எப்படி முடிவு செய்தீர்கள் என்று கேட்டபோது, "இந்தியன் 2 -யை உருவாக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. இருப்பினும், பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து செய்திகளை படிக்கும்போது, சேனாபதி திரும்பி வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. ஆனால், அந்த எண்ணம் இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது.
இந்தியன் 3 யை உருவாக்கும் யோசனையும் என்னிடம் இல்லை. ஆனால் படத்தின் அடிநாதமான லஞ்சம் என்பது இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கிறது. அதனை முழுவதுமாக 2. 50 மணி நேரத்தில் சொல்வது எனக்கு தவறாக பட்டது. அதனால்தான் இந்தியன் 3 உருவானது.
லஞ்சம் என்பது இன்றும் மக்களுடன் கனெக்ட் ஆகும் கருப்பொருளாக இருக்கிறது. எல்லாமே ஒரே இரவில் மாறிவிடாது. ஆனால், இது நிச்சயம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று பேசினார். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத்திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்