Kaithi lorry chasing scene: மரணகாட்டு காட்டிட்டான்னே.. ‘கைதி’ லாரி சிங்கிள் ஷாட் சேஸிங் சீன் உருவானது எப்படி?
நான் அந்த காட்சி எப்படி வரும் என்பதை கார்த்தி சாருக்கு நன்றாக விவரித்து விட்டேன். அவர் அதனை மிக நன்றாக புரிந்து கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி; இந்தப்படத்தில் இடம் பெற்ற சிங்கிள் ஷாட் லாரி சேஸிங் சீன், மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
அந்த சீன் உருவான விதம் குறித்து கடந்த 2 வருடத்திற்கு முன்னர் லோகேஷ் ஃபிலிம் கம்பேனியன் செளத் சேனலுக்கு பேசினார். அந்த பேட்டி இங்கே!
உண்மையில் அந்த சிங்கிள் ஷாட் சீன், கதை எழுதும் போது இல்லை. இன்னொன்று அந்த சீன் பிற படங்களில் இருப்பது போல, பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன். அந்த சிங்கிள் ஷாட் ஐடியா, ஸ்டேஜிங்கில்தான் முடிவானது.
நாங்கள் அந்த ஷாட்டை அந்த இடத்தில் வைக்காமல் கூட அந்த சேஸிங் சீனை எடுத்திருக்கலாம். ஆனால், அந்த சீன் இந்தளவு பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
அந்த ஒரு காட்சியை 16 மணி நேரத்தில் இருந்து 18 மணி நேரம் வரை ஷூட் செய்தோம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கார்த்தி சாரும் கிட்டத்தட்ட 15 மணி நேரத்திலிருந்து 16 மணி நேரம் வரை காத்திருந்தார்.
முன்னமே நான் அந்த காட்சி எப்படி வரும் என்பதை கார்த்தி சாருக்கு நன்றாக விவரித்து விட்டேன். அவர் அதனை மிக நன்றாக புரிந்து கொண்டார். புரிந்து கொண்டதற்கான பலன்தான், அவர் அவ்வளவு மணி நேரம் காத்திருந்தது. உண்மையில், எல்லோருமே ஒன்றை ஒருங்கிணைந்து செய்யும் பொழுது மட்டும்தான் இப்படியான ஒரு அவுட்புட் கிடைக்கும்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்