Aishwarya Arjun: அர்ஜுன் தன் மகளுக்கு வரதட்சணை கொடுத்த எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Arjun: அர்ஜுன் தன் மகளுக்கு வரதட்சணை கொடுத்த எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

Aishwarya Arjun: அர்ஜுன் தன் மகளுக்கு வரதட்சணை கொடுத்த எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Jun 18, 2024 12:56 PM IST

Aishwarya Arjun: நடிகர் அர்ஜுன் தனது மகளுக்கு கொடுத்த வரதட்சணை குறித்து பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் தன் மகளுக்கு வரதட்சணை கொடுத்த எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?
அர்ஜுன் தன் மகளுக்கு வரதட்சணை கொடுத்த எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

திருமணம் அரங்கேறியது

இவர்களது திருமணம் சென்னையில் அர்ஜுனுக்கு சொந்தமான ஹனுமன் கோயிலில் வைத்து பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து நட்சத்திர ஹோட்டலில், திருமண வரவேற்பு நடந்தது. இதில் முதல்வர் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று மணக்களை வாழ்த்தினார்.

இந்நிலையில் அர்ஜுன் தனது மகளுக்கு எவ்வளவு வரதட்சணை கொடுத்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வரதட்சணை என்ன

அர்ஜுன் தனது மகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரதட்சணையாக கொடுத்து உள்ளார். இதையே யூ- டியூப் சேனலில் ஒரு பத்திரிகையாளரும் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுனுக்கு பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன. சென்னை போரூரில் அர்ஜுனுக்கு பல இடங்கள் உள்ளன. அவரிடம் சுமார் 1000 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து உள்ள நிலையில் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு 500 கோடி ரூபாய் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பங்களாவும் பரிசாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் அர்ஜுனுக்கு ஆண் குழந்தைகள் இல்லை. இரண்டு பெண்கள் மட்டுமே உள்ளனர்.

அவர் சம்பாதிப்பதெல்லாம் இரண்டு மகள்களுக்கும் போய் சேரும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 500 கோடி ரூபாய் வரதட்சணை குறித்த உண்மை யாருக்கும் தெரியாவிட்டாலும், நெட்டிசன்கள் உண்மையை போட்டுடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர் ராஜ கம்பீரன்

இவர்களது திருமணம் குறித்து பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் ஆகாயம் சினிமாஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அவர் அதில் பேசும் போது, “சாதாரண வீடுகளில் நடக்கக்கூடிய காதல் திருமணத்திற்கும், பிரபலங்களின் வீடுகளில் நடக்கக்கூடிய காதல் திருமணத்திற்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு சாதாரண வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பெண், அவள் விரும்பக் கூடிய ஆண்மகனை கல்யாணம் செய்து கொள்ள, அவரது குடும்பத்தார் மறுப்பு தெரிவிக்கும்போது, அங்கு நடக்கும் எந்த பிரச்சினையும், சலசலப்பும் வெளியே தெரியாது. அவையனைத்தும், அந்த குடும்பத்திற்குள்ளேயே இருக்கும் “ என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.