தீபாவளி பந்தயத்தில் ஓடப்போகும் படங்கள் லிஸ்ட்! இந்த படம் இருக்குதா?
பல பெரிய ஹீரோக்களின் படம் பண்டிகை தேதியில் வெளியாகி பெரிய வெற்றியும் அடைந்துள்ளது. அதையே தயாரிப்பாளர்களும் ஒரு யுக்தியாக கையாண்டு வருகின்றனர்.

விழாக்காலம் என்றாலே கொண்டாட்டங்கள் பல விதமாக உள்ளன. மக்கள் எப்போதும் விழாக்கலங்களின் கொண்டாட்டங்களை மிகவும் ஆழமாக நேசிக்கின்றனர். கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக திரைப்படங்கள் மாறி விட்டன. இந்நிலையில் பண்டிகைகளில் புதிய படங்கள் வெளியாகுவதும் ஒரு வழக்கமாக மாறி விட்டன. பல பெரிய ஹீரோக்களின் படம் பண்டிகை தேதியில் வெளியாகி பெரிய வெற்றியும் அடைந்துள்ளது. அதையே தயாரிப்பாளர்களும் ஒரு யுக்தியாக கையாண்டு வருகின்றனர். இந்த வரிசையில் வரும் 2024 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு பல பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அப்படங்களின் சிறப்புத் தொகுப்பு குறித்து இங்கு காண்போம்.
பின் வாங்கிய படங்கள்
பண்டிகை காலகட்டத்தில் அதிகமான படங்கள் வெளியாவதை போலவே, சில படங்கள் அதில் இருந்து விலகி செல்கின்றன. இரு பெரும் ஹீரோக்கள் படம் ஒரே சமயத்தில் வெளியாகும் போது படத்தின் தயாரிப்பாளர்கள், பட வெளியீட்டை தள்ளி போடுவதும் உண்டு. அந்த வரிசையில் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு தள்ளி போகும் படமும் உண்டு. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கதில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதமே வெளியாகும் என பெரும் அளவில் எதிறப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் நவம்பர் மாதம் ரீலிசாகும் என தெரிய வந்துள்ளது. தீபாவளி பந்தயத்தில் இருந்து கங்குவா பின் வாங்கியுள்ளது.
களம் காணும் படங்கள்
தீபாவளி வேட்டையை முன் கூட்டியே தொடங்க இருக்கிறது வேட்டையன் திரைப்படம். ஜெய்பீம் படத்தை இயக்கிய த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, அபிராமி என பல நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். இப்படம் ஆயுத பூஜை விடுமுறை நாளான அக்டோபர் 10 அன்று ரீலிஸாக உள்ளது.