S.M. Subbaiah Naidu Memorial Day: எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படத்துக்கு இவர் தான் இசையமைப்பாளர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  S.m. Subbaiah Naidu Memorial Day: எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படத்துக்கு இவர் தான் இசையமைப்பாளர்!

S.M. Subbaiah Naidu Memorial Day: எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படத்துக்கு இவர் தான் இசையமைப்பாளர்!

Manigandan K T HT Tamil
May 26, 2023 05:15 AM IST

M. G. Ramachandran's First Movie: சங்கீதய்யா என தென்னிந்திய திரைத்துறையில் அன்புடன் அழைக்கப்பட்டார். இந்திய இசையில் சிறந்து விளங்கிய அவர், மேற்கத்திய இசையில் ஒருபோதும் நாட்டம் கொண்டதில்லை.

எம்.ஜி.ஆர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு
எம்.ஜி.ஆர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு

சுப்பையா நாயுடு மார்ச் மாதம் 15ம் தேதி 1914ம் ஆண்டு பிறந்தார். சென்ட்ரல் ஸ்டுடியோஸ், பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார். நடிகர் எம்.ஜி.ஆர் படங்களிலும் இவர் பணிபுரிந்திருக்கிறார்.

கடையநல்லூரில் பிறந்த இவர், இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். சிங்கப்பூர் செல்ல வேண்டும் என விரும்பினார். ஆனால், நாடக் குழுக்களில் இணைந்து பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். ஜகன்நாத ஐயர், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை ஆகியோரின் நாடக் குழுக்களில் பணிபுரிந்திருக்கிறார். நடிப்பை விட இசையில் ஆர்வம் அவருக்கு அதிகமானது.

ராஜகோபால ஐயங்கார், சுப்பிரமணிய பாகவதர் ஆகியோரிடம் இசை கற்றறிந்தார்.

பக்த ராமதாஸ் படமாக்கப்பட்டபோது இவர், இசையில் பங்களிக்கத் தொடங்கினார். சங்கீதய்யா என தென்னிந்திய திரைத்துறையில் அன்புடன் அழைக்கப்பட்டார். ஆரம்பம் முதலே அவரது இசை ஸ்டைலை மாற்றாமல் இருந்துவந்தார். இந்திய இசையில் சிறந்து விளங்கிய அவர், மேற்கத்திய இசையில் ஒருபோதும் நாட்டம் கொண்டதில்லை.

1940களில் பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்து திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான ராஜகுமாரி படத்துக்கு இவர் தான் இசையமைத்தார். அந்தப் படம் 1947இல் வெளியானது.

ஏழை படும் பாடு, காஞ்சனா, மலைக்கள்ளன் ஆகிய படங்கள் இவருக்கு நல்லப் பெயரை வாங்கிக் கொடுத்தது.

திருமணம், மரகதம், நாடோடி மன்னன், கொஞ்சும் சலங்கை ஆகிய படங்களும் இவர் இசையமைப்பில் முத்திரை பதித்தது.

ராஜகுமாரி படத்திற்கு சென்ட்ரல் ஸ்டுடியோவில் இசையமைத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர், சுப்பையா நாயுடு இருவரும் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டனர்.

அதன்பிறகு அவர்களின் நட்பு நீண்ட காலத்திற்கு இருந்தது. மர்ம யோகி, மலைக்கள்ளன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியபோது அவர்களின் நட்பு இன்னும் வலிமைப் பெற்றது.

நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கினார். அந்தப் படத்திற்கு சுப்பையா நாயுடுவையே இசையமைப்பாளராக பணியமர்த்தினார்.

அந்தப் படத்தில் என்.எஸ்.பாலகிருஷ்ணனும் இணைந்து இசையமைத்தார். 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே' என்ற பாடல் மூலம் சந்திரபாபுவை பாடகராக்கியதும் சுப்பையா நாயுடுதான்.

ஜானகி, சி.எஸ்.ஜெயராமன், டி.எம்.எஸ், கன்டசாலா, ஏ.எம்.ராஜா, திருச்சி லோகனாதன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.சி.கிருஷ்ணன், ஏ.எல்.ராகவன் என இவர் பல முன்னணி பாடகர்கள், பாடகிகளை தனது படத்தில் பாட வைத்திருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.