HBD Vaali: இளமையையும் முதுமையையும் இணைத்த புதுமை .. வாழிய 'வாலிப' வாலி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vaali: இளமையையும் முதுமையையும் இணைத்த புதுமை .. வாழிய 'வாலிப' வாலி

HBD Vaali: இளமையையும் முதுமையையும் இணைத்த புதுமை .. வாழிய 'வாலிப' வாலி

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 29, 2023 05:00 AM IST

அரசியல் நெடி கிளப்பும் பாடல் களை எழுதிய வாலி, தான் வாழ்ந்த தலைமுறைக்கான தத்துவத்தையும் எழுதினார். கற்பனை யென்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்று எழுதிய வாலி காதலில் கசிந்துருகும் ஏராளமான பாடல் வரிகளையும் எழுதி உள்ளார்.

கவிஞர் வாலி
கவிஞர் வாலி

பிறப்பு

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து திருவரங்கத்தில் வளர்ந்தார் வாலி. இவரது தந்தை சீனிவாச ஐயங்கார். இவரது மனைவி பொன்னம்மா. இவர்களது மகன் வாலி. இவரது இயற்பெயர் ரங்கராஜன். அவரது பள்ளித்தோழன் பாபு ஓவியர் மாலிபோல் ரங்கராஜன் வர வேண்டும் என்று வாலி என்று பெயர் வைத்தார். நண்பன் வைத்த பெயரை விரும்பி ஏற்று கொண்ட வாலி தன் வாழ்நாள் முழுவதும் அதையே தன் பெயராக்கி கொண்டார்.

வாலி ஆரம்ப காலத்தில் வாலி பப்ளிசிட்டிஸ் என்ற பெயரில் விளம்பர நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாத நிலையில் விரக்தியில் இருந்த வாலி மருதநாட்டு இளவரசி படத்தை பார்த்தார். அதில் கருணாநிதியின் வசனம் வாலியை ஈர்த்தது. இது வாலிக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பை தந்தது. இதையடுத்து நாடம் எழுத தொடங்கினர். வாலி தளபதி என்ற நாடத்தை எழுதி அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் தளபதி கதாபாத்திரத்தை வாலி கடுமையான வசனங்களால் விமர்சித்திருந்தார். ஆனால் அண்ணாவின் ஆதரவாகளர்கள் கடும் கோபம் அடைந்தனர். காரணம் பெரியாரின் தளபதி என்று அண்ணா அழைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் திரை உலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு புறப்பட்டார்.

வாலியின் நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் என்ற நடிகர் வாலிக்கு அதிகம் உதவினார்.

1968ல் அழகர் மலைக்கள்வன் படத்தில் வாலி தன் முதல் பாட்டை எழுதினார். ஆனாலும் வாலிக்கு பெயர் பெற்று தந்த பாட்டு என்றால் நல்லவன் வாழ்வான் என்ற படத்தில் சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள் பாடல் பெரிதும் புகழ் பெற்றது.

எம்.ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட போது பட்டுக்கோட்டைக்கு பின் வாலி அந்த இடத்தை இட்டு நிரப்பினார். நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதேனை படமாட்டார். என்ற பாடல் எம்ஜிஆரை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது.

அந்த காலத்தில் சினிமா பாட்டோடு சேர்த்து அந்த நடிகர்களின் அரசியலை புகுத்தும் நுட்பத்தை கவிஞர்கள் அறிந்திருந்தனர். அந்த வகையில் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடல் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. இப்படி ஆரம்பித்த வாலி அடுத்தடுத்து 15000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாட்டெழுதினார். அரசியல் என்றால் பெரியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வைகோ வரை தன் நட்பை தொடர்ந்தார்.

அதேபோல் அரசியல் நெடி கிளப்பும் பாடல் களை எழுதிய வாலி, தான் வாழ்ந்த தலைமுறைக்கான தத்துவத்தையும் எழுதினார். கற்பனை யென்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்று எழுதிய வாலி காதலில் கசிந்துருகும் ஏராளமான பாடல் வரிகளையும் எழுதி உள்ளார். அதனால் தான் அவர் வாலிபக்கவிஞர் என போற்றப்பட்டார்.

கவிஞர் வாலிக்கு இளம் வயதில் தமிழில் கொண்டிருந்த ஆர்வத்தை போல் ஓவியத்திலும் ஆர்வம் இருந்தது. அத்தோடு அவர் நின்று விட வில்லை. சிறுகதை, கவிதை, உரைநடை என மொத்தம் 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். அம்மா, பொய்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் ஆகியவை ஆகும். அவரது 80 ஆவது நாள் பிறந்தநாளையொட்டி வாலி 1000 என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட1000 பாடல்கள் திரையிசை பாடல்களாக வெளியிடப்பட்டது. வாலி ஒரு படத்தை இயக்கியும் உள்ளார். சில படங்களில் நடித்தும் இருந்தார். 

விருதுகள்

1973-ல் 'இந்திய நாடு என் வீடு'.. என்ற 'பாரத விலாஸ்' திரைப்படத்தின் பாடலுக்காக வாலிக்கு இந்திய தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர் வாங்க மறுத்தார். பின்னர் வாலிக்கு கடந்த 2007ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

வாலி ஐந்து முறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். மேலும் கடந்த 2000ம் ஆண்டு மகாகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக 2013 ஜூன் 7ம் தேதி அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் ஜூலை 18 ல் இயற்கை எய்தினார்.

வாலியின் பிறந்த நாளான இன்று அவர் குறித்த தகவலை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.