HBD Suriya: ஜெயிச்சுரு மாறா.. இழிவுகளை துடைத்து எதற்கும் துணிந்தவன்.. பேரழகன் சூர்யா பிறந்தநாள் இன்று!-hbd suriya jayichuru mara he who wipes away insults and dares to do anything suryas birthday is today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Suriya: ஜெயிச்சுரு மாறா.. இழிவுகளை துடைத்து எதற்கும் துணிந்தவன்.. பேரழகன் சூர்யா பிறந்தநாள் இன்று!

HBD Suriya: ஜெயிச்சுரு மாறா.. இழிவுகளை துடைத்து எதற்கும் துணிந்தவன்.. பேரழகன் சூர்யா பிறந்தநாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 23, 2023 05:00 AM IST

நடிப்பு, வருமானம் என்று மற்றும் ஒதுங்கி விடாமல் சமூகத்திற்கும் தன்னால் ஆன விஷயங்களை செய்து வருகிறார். அகரம் என்ற பெயரில் பொது நலன் கருதிய லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் வழியாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.

சூர்யா பிறந்தநாள்
சூர்யா பிறந்தநாள்

பிறப்பு

நடிகர் சிவக்குமார்- லட்சுமி குமாரி தம்பதிக்கு மகனாக 1975ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்தார். இவரது தம்பி நடிகர் கார்த்தி. தங்கை பாடகி பிருந்தா. இவர் தன் உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தியா, தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொழில் ஆசை

நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். இவர் ஆரம்ப நாட்களில் பிஸ்சஸ் மேனாக வலம் வர விரும்பி லயோலா கல்லூரியில் பி.காம் பயின்றார். படித்து முடித்த உடன் கார்மெண்ட்ஸில் 8 ஆயிரம் சம்பளத்திற்கு பணியாற்றினார். இதற்கிடையில் இயக்குநர் வசந்த தான் இயக்கிய ஆசை திரைப்படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் நடிக்க ஆசை இல்லை என்று மறுத்து விட்டார். இதையடுத்து மணிரத்னம் ஒரு போட்டோ ஷூட் செய்ய அவரது அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சூர்யா.

இதையடுத்து நேருக்கு நேர் படத்தில் 1997ல் திரை உலகில் அறிமுகம் ஆனார். இதையடுத்து காலே நிம்மதி, சந்திப்போமோ, பெரியண்ணா, பூவெல்லாம்கேட்டுபார்,ப்ரெண்ஸ் என பல படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் அவர் திரைத்துறைக்கு பொருத்தம் இல்லாதவர் என பல விமர்சனங்கள் வெளிப்படையாகவே பத்திரிகைகளில் வெளியானது.

ஆனால் அதற்காகவெல்லாம் அலட்டி கொள்ளாமல் மனம் தளராமல் சினிமாவிற்கு தன்னை ஒப்புக்கொடுத்து உழைத்த சூர்யாவின் கேரியரில் நந்தா படம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது எனலாம். தன்னை விமர்சித்தவர்களுக்கு தன் நடிப்பின் வழி பதிலடி கொடுக்க ஆரம்பித்த சூர்யா நத்தா தொடங்கி, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, ஏழாம் அறிவு என தொடர்ச்சியா வெற்றி படங்களை கொடுக்க ஆரம்பித்தார். ரொமான்டிக் காதலன், அன்பான அண்ணன், சேட்டை செய்யும் மகன், பாசம் மிகு அப்பா, ஸ்ட்ரிக்டான போலீஸ், என தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபிக்க இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறார்.

மேலும் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் திரைப்பட தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என எல்லாவற்றிலும் கால் பதித்து வருகிறார்.

சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய்பீம் போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பொது சேவையில் சூர்யா

நடிப்பு, வருமானம் என்று மற்றும் ஒதுங்கி விடாமல் சமூகத்திற்கும் தன்னால் ஆன விஷயங்களை செய்து வருகிறார். அகரம் என்ற பெயரில் பொது நலன் கருதிய லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் வழியாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.

இப்படி ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கு கைகாட்டி விளக்காய் இருந்து வழிகாட்டும் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுடன் இணைந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.