HBD Rajinikanth: தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து மந்திரம் ரஜினிகாந்த்!
ரஜினிக்கென்று தனி ஸ்டைல், நெருப்பு தெரிக்கும் பார்வை, பேச்சிலும் தனக்கென்று தனி பாணி, நகைச்சுவை நடிகர்களுக்கே சவால் விடும் காமெடி, வில்லத்தனம் ஆகியவை ரசிகர்களை ஈர்க்கும் ராகமாக பாா்க்கப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12-ல் ராமோஜிராவ் - ராமாபாய் தம்பதியின் 4-வது குழந்தையாக பிறந்த ரஜினிக்கு பெற்றோர் வைத்த பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் இருக்கும் அர்ப்பணிப்பும், உழைப்பும் சாதாரணமானது அல்ல.
1975-ஆம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஜினி ‘அன்னாத்த’ திரைப்படம் வரை மூன்று தலைமுறை ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். தமிழ் சினிமா வரலாற்றில் 45 வருடங்களுக்கும் மேலாக தனக்கென்று தனி ஸ்டைல், நெருப்பு தெரிக்கும் பார்வை, பேச்சிலும் தனக்கென்று தனி பாணி, நகைச்சுவை நடிகர்களுக்கே சவால் விடும் காமெடி, வில்லத்தனம் என பன்முகத்தன்மையால் ரசிகர்களை ஈர்த்து வரும் ரஜினி, இன்றும் சூப்பர் ஸ்டாராகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட.. சின்ன குழந்தையும் சொல்லும்' என்ற பாடல் வரிகள் போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து மத்திரமாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது தான் நடிகர் ரஜினிகாந்த். அன்று முதல் இன்று வரை தன்னுடைய வித்தியாசமான நடிப்பாலும், இயல்பான முக பாவனைகளாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து மிளிர்ந்துகொண்டு இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
தன்னை ஒரு நடிகராக செதுக்கிய மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர், அண்ணன் சத்யநாராயணா, தான் பேருந்து நடத்துனராக இருந்த போது தனக்குள் இருந்த நடிப்பு திறமையை அடையாளம் கண்ட நண்பரும் ஓட்டுநருமான ராஜ் பகதூர் ஆகியோரை எப்போதும் மறக்காதவர் ரஜினி.
பெங்களூருவில் பிறந்தாளும் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் தான் ரஜினி தந்தையின் சொந்த ஊர் என்பதால், தேர்தல் சமயங்களில் வெளிமாநிலத்தவர் என்ற விமர்சனம் தன்னை நோக்கி வரும் போதெல்லாம், தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் ரஜினி பதிலளித்துள்ளார்.
அதேபோல், தன்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என்று அடிக்கடி ரஜினி நினைவு படுத்துவது கடைக்கோடியில் இருக்கும் தமிழர்களுக்கும் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்று தெரியும்படியான உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. 47 ஆண்டுகளில் 169 திரைப்படங்களில் நடித்து அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் ரஜினிகாந்த் 80ஸ், 90ஸ், 2கே கிட்ஸ் என அனைவரது மனதிலும் சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருகிறார்.
இன்று 73வது வயதில் அடி எடுத்து வைக்கும் ரஜினிக்கு, கட்சி பேதமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தான் கடந்து வந்த பாதையை என்றும் மறவாத ரஜினிகாந்த், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மேலும் பல சாதனைகள் படைக்க மனநிறைவோடு வாழ நாமும் வாழ்த்துவோம்.
டாபிக்ஸ்