HBD Director Kasturi Raja : மண், மக்களின் வாழ்வியல், காதல் என பல பரிமாணங்களிலும் கலக்கிய இயக்குனர் கஸ்தூரி ராஜா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Director Kasturi Raja : மண், மக்களின் வாழ்வியல், காதல் என பல பரிமாணங்களிலும் கலக்கிய இயக்குனர் கஸ்தூரி ராஜா!

HBD Director Kasturi Raja : மண், மக்களின் வாழ்வியல், காதல் என பல பரிமாணங்களிலும் கலக்கிய இயக்குனர் கஸ்தூரி ராஜா!

Priyadarshini R HT Tamil
Aug 08, 2023 02:51 PM IST

HBD Director Kasthri Raja : கஸ்தூரி ராஜா, திரைப்பட இயக்குனர், நடிகர் தனுஷ், இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் தந்தை. தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பிறந்தவர். 1946ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்தவர். இவரின் ராசாவின் மனசிலே திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன், இவருக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கஸ்தூரி ராஜா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கஸ்தூரி ராஜா

அந்தப்படத்தின் மூலம் தனுசுக்கு சினிமாவில் ஒரு பிரகாசமான வாழ்க்கை அமைந்தது. இவரது மூத்த மகன் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்யாசமான இயக்குனர்களுள் ஒருவர். இவரது 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் படு ஹிட்டாகி இவருக்கு சினிமாவில் தனி இடத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. தனுஷ், ஒரு நடிகராக மேலும், மேலும் வளர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் ஆகும் வரை உயர்ந்தார்.

ஆனால் கஸ்தூரி ராஜா தான் ஒரு சினிமா இயக்குனர் ஆவேன் என்று எண்ணியவர் கிடையாது. அவர் சினிமா துறையில் இருந்தாலும் பிரபல இயக்குனராக வருவார் என்பது அவர் கனவிலும் நினைத்திராதது.

ஒரு சிறிய ஊரிலிருந்து அவர் சென்னைக்கு ரயில்வே துறையில் ஒரு நேர்முகத்தேர்வுக்காக வந்தார். ஆனால் அவர் அந்த தேர்வில் தேர்வாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர், கதை எழுத துவங்கினார். அவருக்கு இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கஸ்தூரி ராஜாவுக்கு துணை இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். கஸ்தூரி ராஜா அவரது துணை இயக்குனராகி அதில் சம்பாதித்து தனது அன்றாட செலவுகளை கவனித்து வந்தார்.

இவர் திரைத்துறையில் இருந்து விலகி மாத வருமானமுள்ள வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தார் ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அவரால் அது முடியவில்லை. பின்னர் அவர் சினிமா இயக்கத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். பின்னர் ஒரு இயக்குனராக பிரபலமடைந்தார். அது முதல் அவர் தொடர்ந்த ஹிட் படங்களையை தேர்ந்தெடுத்து வழங்கி வந்தார்.

கஸ்தூரி ராஜாவுக்கு சினிமாத்துறையில் புகழ் மிகத்தாமதமாகவே கிடைத்தது. இல்லாவிட்டால் இவர் இன்னும் பிரபலமடைந்திருப்பபார். 1991ம் ஆண்டு இவரது முதல் படம் என் ராசாவின் மனசிலேவை இயக்கினார். ராசாவின் மனசிலே படம், மாயாண்டி என்பரை பற்றியது. அதில் முரட்டுத்தனமான மாயாண்டி தான் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வார்.

ஆனால் அந்தப்பெண்ணுக்கு அவருடனான வாழ்வில் மகிழ்ச்சியிருக்காது. அவரது முரட்டுத்தனத்தை அவரால் பொருத்துக்கொள்ள முடியாது. ஆனால் அந்தக்கால வாழ்க்கை முறை ஒருவருடன் மணமுடித்து வைத்துவிட்டால், அவருடனே வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்பது பெண்களின் தலையெழுத்தாக இருந்தது. எனவே அந்தப்பெண்ணும் அவருடன் வாழ்ந்து வருவார்.

ஒரு கட்டத்தில் மாயாண்டி நல்ல மனிதர் என்பதை தெரிந்துகொண்டு அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படும்போது, அந்தப்பெண் இறந்துவிடுவார். உணர்வு மயமான படத்தில் இளைய ராஜாவின் இசையில் குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே என்ற பாடலும், சோலப்பசுங்கிளியே, சொந்முள்ள பூங்கொடியே பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி படத்தை படு ஹிட்டாக்கின. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கஸ்தூரி ராஜா உண்மை வாழ்க்கை சம்பவங்களை படமாக்குவதிலும், அவரது அனுபவங்களை படமாக்குவதிலும் முனைப்பு காட்டினார்.

இவரது படங்கள் அவர் வாழ்ந்த சமூக வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டவை. நாட்டுப்புற பாட்டு என்ற படத்தை கஸ்தூரி ராஜா நாட்டுப்புற கலைஞர்களை மையமாக வைத்து எடுத்தார். இந்தப்படம் திரையில் ஓராண்டுக்கும் மேல் ஓடியது. இந்தப்படத்தின் பாடல்களும் பிரபலமானது. துள்ளுவதோ இளமை போன்ற காதல் படங்களையும் இவர் இயக்கினார்.

கஸ்தூரி ராஜாவின் மனைவி விஜயலட்சுமி, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் தவிர இவருக்கு கார்த்திகா தேவி மற்றும் விமலா கீதா என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இன்று பிறந்த நாள் காணும் கஸ்தூரி ராஜாவை ஹெச்.டி தமிழ் வாழ்த்துகிறது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.