HBD B.R.Panthulu : கன்னடத்தின் முதல் கலர் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பந்துலு பிறந்த தினம் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd B.r.panthulu : கன்னடத்தின் முதல் கலர் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பந்துலு பிறந்த தினம் இன்று!

HBD B.R.Panthulu : கன்னடத்தின் முதல் கலர் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பந்துலு பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Jul 26, 2023 05:00 AM IST

HBD B.R. Panthulu : 25 வாரங்கள் ஓடிய முதல் கன்னட படம் ஸ்கூல் மாஸ்டர் ஆகும். இவர் பந்துலு என்று இந்தப்படத்தின் மூலம் அறியப்பட்டார். இந்தப் படம் தெலுங்கில் என்.டி.ஆர் நடிப்பில் வெளியானது. இந்தப்படம் மலையாளம் மற்றும் இந்தியிலும் எடுக்கப்பட்டது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பி.ஆர்.பந்துலு.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பி.ஆர்.பந்துலு.

இவரது புராண படங்கள் கர்ணன், தில் தேரா திவானா ஆகியவையாகும். இவர் முதல் கன்னட வண்ணத்திரைப்படம் ‘ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு’ படத்தை இயக்கினார். இவர் திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன் ஆசிரியராக பணியாற்றினார். இவர் சம்சார நாக்கா என்ற கன்னட படத்தில் நடிகராக திரைத்துறையில் தனது பயணத்தை துவக்கினார். இந்தப்படத்தின் கதை சந்திர கலா நாடக மண்டலியின் நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டது. 

இவர் 1957ம் ஆண்டு தங்கமலை ரகசியம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஸ்கூல் மாஸ்டர், ஸ்ரீகிருஷ்ண தேவ ராயா போன்ற கன்னட திரைப்படத்தை இயக்கி பிரபலமானார். அவரது வாழ்நாளில் அவர் 57 திரைப்படங்களை இயக்கினார். பத்மினி பிக்சர்ஸ் என்ற பெயரில் தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் திரைப்படங்களை இயக்கினார்.

தங்கமலை ரகசியம் படத்தை இயக்கி நடித்தார். அந்தப்படம் கன்னடத்திலும் வெளியானது. அடுத்து வெளியான ஸ்கூல் மாஸ்டர் திரைப்படம் படு ஹிட்டானது. இந்தப்படத்தை இவர் இயக்கி தயாரித்தார். சிறந்த படத்திற்கான அகில இந்திய சான்றிதழை இந்தப்படம் பெற்றது. இந்தப்படத்தில் பந்துலு பள்ளி தலைமை ஆசிரியராக நடித்திருப்பார். 

25 வாரங்கள் ஓடிய முதல் கன்னட படம் ஸ்கூல் மாஸ்டர் ஆகும். இவர் பந்துலு என்று இந்தப்படத்தின் மூலம் அறியப்பட்டார். இந்தப் படம் தெலுங்கில் என்.டி.ஆர் நடிப்பில் வெளியானது. இந்தப்படம் மலையாளம் மற்றும் இந்தியிலும் எடுக்கப்பட்டது.

சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் பந்துலு தயாரித்து இயக்கியப்படம். இந்த படத்திற்கும் அகில இந்திய சிறந்த படத்துக்கான மெரிட் சான்று கிடைத்தது. இந்தப்படமும் முதல் வண்ணப்படம்.

இவர் சுதந்திர போராட்ட வீராங்களை கிட்டூர் சென்னம்மாவின் கதையை. அவர் பிரிட்ஷ்காரர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த கதையை கன்னடத்தில் கிட்டூர் சென்னம்மா என்ற பெயரிலே இயக்கினார். இவரும், கிட்டூர் சென்னமாவாக சரோஜா தேவியும் நடித்தனர். இந்தப்படம் சிறந்த கன்னட திரைப்படம் என்ற பெயரை பெற்றது.

இவர் தில் தேரா திவானா என்ற இந்தி காமெடி திரைப்படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் ஷம்மி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கர்ணன் படத்தையும் தயாரித்து, இயக்கினார். இந்தப்படத்திலும் சிவாஜி கணேசன் நடித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் இரு படங்களுமே சிவாஜியின் சினிமா வாழ்வில் மைல்கல் படங்களாகும். மகாபாரதத்தில் இருந்த ஒரு கதையை விளக்கிய கர்ணன் படம் தேசிய விருதுகள் விழாவில் சிறந்த படத்துக்கான மெரிட் சான்று பெற்றது.

பந்துலுவின் மனைவி பெயர் ஆண்டாள்அம்மாள், இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் ரவிஷங்கர், மகள் விஜயலட்சுமி. இவரது மகள் ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர். 1910ம் ஆண்டு ஜீலை 26ம் தேதி பிறந்த பந்துலு தனது 64வது வயதில் கர்நாடகாவின் பெங்களூருவில் இறந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.