தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Hbd Amy Jackson Wamma Duriyamma Actress Amy Jackson's Birthday Today

HBD Amy Jackson: வாம்மா துரையம்மா.. நடிகை எமி ஜாக்சன் பிறந்த நாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 31, 2024 06:40 AM IST

சிறு வயதிலேயே மிஸ் லிவர்பூல், மிஸ் பிரிட்டன் ஆகிய இரு பட்டங்கள் வென்ற பிறகு மாடலிங் துறையில் மிகவும் பிரபலமானார். பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்களுடன் மாடலாக பணிபுரிய ஒப்பந்தமானார்.சின்ன வயதிலேயே இந்த நிலைக்கு வர அழகும் வாளிப்பான உடல் தோற்றமும் அவரின் கவர்ச்சியும் உதவியாக இருந்தது.

எமிஜாக்சன்
எமிஜாக்சன் (iamamyjackson / Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

டக்ளஸ் என்ற இடத்தில் மார்குட்டா , ஆலன் ஜாக்சன் ஆகியோர் மகளாக பிறந்த இவரின் முழு பெயர் எமி லூயிஸ் ஜாக்சன் ஆகும். பெரும் பகுதி லிவர்பூல் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்கே உள்ள செயிண்ட் எட்வர்ட் கல்லூரியில் படித்தவர். ஆங்கில இலக்கிய புலமை பெற்றவர். 

இவர் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி நிறைய போட்டிகளில் பங்கேற்றார். சிறு வயதிலேயே மிஸ் லிவர்பூல், மிஸ் பிரிட்டன் ஆகிய இரு பட்டங்கள் வென்ற பிறகு மாடலிங் துறையில் மிகவும் பிரபலமானார். பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்களுடன் மாடலாக பணிபுரிய ஒப்பந்தமானார். சின்ன வயதிலேயே இந்த நிலைக்கு வர அழகும் வாளிப்பான உடல் தோற்றமும் அவரின் கவர்ச்சியும் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட 17 முறை அழகி பட்டங்கள் வென்றுள்ளார்.

மாடலிங் துறையில் இருந்தவரை அவருக்கு தொடர்பே இல்லாத தமிழ் திரைப்பட உலகம் தான் சினிமாவில் நடிக்க இழுத்து வந்தது. ஆர்யா நாயகன் ஆக நடித்த படம் "மதராசபட்டிணம்" . இந்தியா சுதந்திர போராட்ட களத்தில் உள்ள கதை. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ஆளுநர் மகள்தான் இந்த படத்தின் நாயகி. அந்த நாயகி தேடலில் இனையதளம் மூலம் கண்டறிந்து அழைத்து வரப்பட்டவர் தான் எமிஜாக்சன். கிராமத்தில் உள்ள இளைஞரை விரும்பி காதலிப்பவர். தமிழ் மொழி அறியாத இவர் மிகவும் அழகாக கதையின் வலிமை புரிந்து தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து இருப்பார். 

2010 ல் வெளியே வந்த இந்த படத்தில் தனது முதல் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். இந்த படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் ஏ. எல். விஜய் உடன் இரண்டாவது படத்தில் விக்ரம் உடன் தாண்டவம் என்ற படத்தில் நடித்தார்.

 விக்ரம் உடன் "ஐ" தனுஷ் உடன் தங்க மகன் அட்லி இயக்கத்தில் விஜய் உடன் "தெறி" உதயநிதி உடன் "கெத்து" ரஜினியின் எந்திரன் 2.0 தேவி என்று தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து சற்றே இடைவெளி விட்டு சமீபத்தில் பொங்கல் வெளியீடாக மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் மிஷன் சாப்டர் 1 என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

2019 ல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பணோயிட் என்பவரை திருமணம் செய்து பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயர் வைத்தார். நிறப்பாகுபாட்டுக்கு எதிராக வளர்க்க ஆசைப்பட்டார். குறுகிய காலத்திலேயே ஜார்ஜ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். 

பின்னர் ஹாலிவுட் நடிகர் எட் கெஸ்விக் அவர்கள் உடன் காதல் ஏற்பட்டது. அவரும் படப்பிடிப்பு தளங்களுக்கு எமியுடன் வருவது உண்டு. இரு தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பனி படர்ந்த மலையில் ஒரு பாலத்தின் மீது நின்று காதலை உலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்து மோதிரம் மாற்றி உறுதி செய்யும் வகையில் மிகவும் கியூட்டான புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு வைரல் ஆக்கினர். 

இவர் அடிக்கடி கவர்ச்சியாக உடை அனிந்து போட்டோ ஷுட் நடத்தி எல்லோரையும் கவனிக்க வைப்பார். ஃபேஷன் ஷோக்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். வெளிநாட்டு பெண் என்ற போதிலும் சினிமாவுக்கு மொழியை விட மனித உனர்வுகளை கடத்தும் திறமையை கொண்டவர். இன்று 32 வயதை கடந்த இவர் வாழ்க்கை பயணமும் கலைப்பயனமும் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.