Harris Jayaraj: ‘உசுர உருவி எடுக்குறார்யா..’ -ஹாரிஸ் மாம்ஸ் -னு உங்கள கூப்பிடுறாங்களே? - ஹாரிஸ் கலகல பதில்!
இவர் இசையமைத்த பெரும் பான்மையான மெலடி காதல் பாடல்கள் இன்றும் மக்கள் மனதை கவர்ந்து வருகிறன. இதனிடையே கேரியரில் சற்று சரிவை சந்தித்த ஹாரிஸ் புது ஸ்டியோவை நிறுவி அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். கெளதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தொடர்ந்து மஜ்னு, சாமி, லேசா லேசா, கோவில், காக்க காக்க, செல்லமே, அந்நியன், அயன், ஆதவன், துப்பாக்கி, காப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
இவர் இசையமைத்த பெரும்பான்மையான மெலடி காதல் பாடல்கள் இன்றும் மக்கள் மனதை கவர்ந்து வருகிறது. இதனிடையே கேரியரில் சற்று சரிவை சந்தித்த ஹாரிஸ் புது ஸ்டியோவை நிறுவி அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்.
இவரது இசையில் அடுத்ததாக துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் இருந்து வெளியான ஒரு மனம் நிற்க சொல்லுதே, மை நேம் இஸ் ஜான் உள்ளிட்ட பாடல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் இசை நிகழ்ச்சிகளிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
அங்கு அவர் இசையமைக்கக்கூடிய பாடல்கள் பல சமூகவலைதளங்களில் அவ்வப்போது வைரல் ஆவதும் உண்டு. இந்த நிலையில் இன்றைய தினம் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ நான் மிகவும் எமோஷனான மனிதர். அதனால்தான் நான் பொதுவாக ஊடகங்களை சந்திப்பதில்லை என்றார்.
தொடர்ந்து ரசிகர்கள் தன்னை ஹாரிஸ் மாம்ஸ் என்ற அழைப்பது குறித்து பேசிய அவர், “ அந்த வரவேற்பு பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அந்த அன்பு நெகிழ வைக்கிறது.” என்றார்.
டாபிக்ஸ்