Parking Movie: புது மாப்பிள்ளை ஹரிஷ் கல்யாணின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?
நடிகர் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ளார், நடிகர் ஹரிஷ் கல்யாண். தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் அடுத்த பட தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி படத்திற்கு, பார்க்கிங் என பெயரிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான போஸ்டர் வெளியாகி உள்ளது.
அதில், இரண்டு கார்களும், நெருக்கு நேராக மோதிக் கொள்ளும் வேகத்திலும், இடையில் பார்க்கிங் என பெயர் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே சினிமா மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நேர்மறையான பேச்சை உருவாக்கியுள்ளது. திட்டமிட்டபடி கச்சிதமாக உருவாகி வரும் இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார். இந்த படத்தில் ஐடி நிறுவனத்தின் ஊழியராக ஹரிஷ் கல்யாண் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
திரில்லர் ட்ராமாவான ’பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்க உள்ளார். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ்.சினிஷ் (’பலூன்’ பட இயக்குநர் மற்றும் தெலுங்கில் ’டிக்கிலூனா’ மற்றும் ’விவாஹா போஜனம்பு’ ஆகியவற்றின் தயாரிப்பாளர்) பேஷன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு ‘பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.
சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்