“ கருமுட்டையும் விந்தணுவும் இணைவதை தவிர மற்ற எல்லாம்.. இது பாவ மன்னிப்பு வழங்கும் இடம் கிடையாது” - மருத்துவர் காட்டம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ கருமுட்டையும் விந்தணுவும் இணைவதை தவிர மற்ற எல்லாம்.. இது பாவ மன்னிப்பு வழங்கும் இடம் கிடையாது” - மருத்துவர் காட்டம்!

“ கருமுட்டையும் விந்தணுவும் இணைவதை தவிர மற்ற எல்லாம்.. இது பாவ மன்னிப்பு வழங்கும் இடம் கிடையாது” - மருத்துவர் காட்டம்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 21, 2024 07:13 PM IST

கருமுட்டையும் விந்தணுவும் இணைவதை தவிர மற்ற எல்லாம் அந்த வீடியோவில் இருக்கிறது. இது பாவ மன்னிப்பு வழங்கும் இடம் கிடையாது - மருத்துவர் காட்டம்

“ கருமுட்டையும் விந்தணுவும் இணைவதை தவிர மற்ற எல்லாம்.. இது பாவ மன்னிப்பு வழங்கும் இடம் கிடையாது” -  மருத்துவர் காட்டம்!
“ கருமுட்டையும் விந்தணுவும் இணைவதை தவிர மற்ற எல்லாம்.. இது பாவ மன்னிப்பு வழங்கும் இடம் கிடையாது” - மருத்துவர் காட்டம்!

மன்னிப்புக்கேட்டார்

இவருக்கு யூடியூப்பில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இருவருக்கு திருமணம் நடந்தது. அதனை தொடர்ந்து இர்ஃபானின் மனைவி ஆலியா கர்ப்பமாக இருந்த நிலையில், வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் சோதனை செய்து தெரிந்து கொண்டு, இந்தியாவில் வெளியிட்டார். இதற்கு மருத்துவ கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, மன்னிப்புக்கேட்ட இர்ஃபான் அந்த வீடியோவையும் நீக்கினார். கடந்த ஜூலையில் அவருக்கு குழந்தை பிறந்தது.

இதனையடுத்து இர்ஃபான், அண்மையில் மனைவியின் பிரசவ அறையில் நடந்த நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டார். அதில், குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபானே கத்தரிக்கோலால் வெட்டுவது உள்ளிட்ட பல காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதற்கு மருத்துவர்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்து இருக்கிறது.

 

இந்த நிலையில் மகப்பேறு மருத்துவர் அனுரத்னா இந்த விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் விரிவாக எழுதி இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “ கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என தெரிந்தும் இர்ஃபான் தனது யூடியூப்(you tube) பக்கத்தில் தன் மனைவி கருத்தரித்து இருப்பதையும், அவர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்றும் கூறி காணொளி வெளியிட்டார்.

ஏன் தாயின் உறவினர் ஒருவர் இருக்க வேண்டும்

அது விவாதம் ஆனதும்,  அதை பலரும் எதிர்க்க தொடங்கியதும் இந்தியாவில் கருவின் பாலினம் கண்டுபிடிக்கவில்லை, தான் வெளிநாட்டில் சோதனை செய்து தெரிந்து கொண்டதாக கூறினார். அதன் பின்னர் அதற்கு மன்னிப்பும் கோரினார். இன்றைய செய்தியில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கினார் என்று பார்த்ததும் ஒரு மகப்பேறு மருத்துவர் என்கிற முறையில் அவரின் யூடியூப் சென்று பார்த்தேன். அதை பார்த்த உடன் நான் அப்படியே அதிர்ச்சியானேன். 

யோனி பிரசவம் பார்க்கும் இடத்தில் மட்டுமே ஒரு உடனாளி(birth companion) இருக்க அரசு அனுமதிக்கிறது. ஒவ்வொரு யோனி பிரசவத்தின் போதும், அந்த தாயின் உறவினர் ஒருவர் உடன் இருக்கலாம், அது பிரசவம் சார்ந்த பயத்தினை போக்கி, குடும்ப சூழலோடு ஒரு பயமற்ற பாதுக்காப்பான பிரசவத்தை அந்த தாய்க்கு தரும். ஆனால், இந்த காணொளியில் கணவன் மனைவி பாலியல் உறவு கொண்டு கருமுட்டையும் விந்தணுவும் இணைவதை தவிர, மற்ற எல்லாத்தையும் இர்ஃபான் காட்டி இருக்கிறார். 

அவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் செல்கிறார். Unsteriled ஆக தான். ஊதா நிறத்தில் ஒரு துணியை போட்டால், அது sterile என அந்த மருத்துவமனை நிர்வாகம் நினைக்கிறதா எனத் தெரியவில்லை. 

வயிற்றைக்கிழிப்பதை பார்க்கிறார்

வயிற்றை கிழிப்பதை பார்க்கிறார். அனைத்தையும் காணொளியாக பதிவு செய்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை என உடனே அறுவைசிகிச்சை செய்த மகப்பேறு மருத்துவர் சொல்கிறார். அடுத்தது இர்ஃபானிடம், "do you want to cut the cord" என அதே மருத்துவர் கேட்கிறார். இர்ஃபான் தலை அசைத்ததும், உடனே அவருக்கு glove கொடுங்க என்கிறார் அந்த மருத்துவர்  

உடனே ஒரு set gloves கொடுக்கப்படுகிறது. இர்ஃபான் அதை அணிகிறார்; உடனே அவர் கையில் sterile scissor கொடுக்கப்படுகிறது. அவர் உடனே தொப்புள் கொடியை வெட்டுகிறார். அந்த மகப்பேறு மருத்துவர், அவர் ஏதோ பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதுபோல் அவரை ஊக்கப்படுத்தகிறார் 

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இந்த youtuber மீது வழக்கு தொடுக்க வேண்டும். சென்றமுறை தன் அரசியல் பலத்தால் தப்பித்தார் என்பதே உண்மை. மன்னிப்பு கேட்டார் விட்டுட்டோம் என்றால் இதற்கு முன் கருவின் பாலினம் கண்டறிதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல்லாரிடமும் மன்னிப்பு கடிதம் வாங்கி விட்டு, அவர்களை விடுவித்து விட வேண்டியது தானே! நாளைக்கு இன்னொருவர் அதே தவறை செய்வான். அத்தவறை செய்யும் முன்பே மன்னிப்பு கடிதம் முன்கூட்டியே எழுதி வைத்திருப்பான். 

ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த பிரசவம் நடந்த மருத்துவமனையில் உள்ள scan machine எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கருவின் பாலினம் இதே மருத்துவரால் இதே மருத்துவமனையில் சொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.

இந்த பிரசவம் நடந்த மருத்துவமனையை முழுக்க ஆய்வு செய்ய வேண்டும். NABH accreditation அது இது சொல்லிக்கொண்டு ஒரு unsterile common manஐ அறுவை சிகிச்சை அரங்கில் விட்டு கத்தியை கொடுத்து தொப்புள் கொடியை வெட்டிய மருத்துவமனையின் அனைத்து quality related certificatesஐ திரும்ப பெற வேண்டும்.இதை அனுமதித்த, ஊக்கப்படுத்திய அந்த மகப்பேறு மருத்துவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகினும் மருத்துவப்பணி செய்ய தடைவிதிக்க வேண்டும்.

இர்ஃபானின் அரசியல் பின்புலம் என்ன, அந்த மருத்துவமனையின் அரசியல் பின்புலம் என்ன, அந்த மகப்பேறு மருத்துவரின் அரசியல் பின்புலம் என்ன என்று பார்த்து மன்னிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு, மன்னித்து விட்டுச்செல்ல இது பாவமன்னிப்பு வழங்கும் இடம் அல்ல; இது சட்ட திட்டங்களை கடைபிடிக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் என்பதை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிலைநாட்டும் என நம்புகிறேன்.

இல்லையேல், நாளைக்கே ஆயிரம் பேர் வீட்டில் இருந்தே கத்திரிக்கோலோடும் ஒரு வீடியோ கேமராவோடும் பொண்டாட்டிக்கு பிரசவம் ஆகும் மருத்துவமனைக்கு வந்து நாங்களும் ஆபரேஷன் தியேட்டர்குள்ள வருவோம். தொப்புள் கொடியை வெட்டுவோம், அதை பதிவு செய்வோம்,அதை வியாபாரமாக்கி அதில் தான் சோறு திண்போம் என வந்தால் நாம் அந்த ஆயிரம் பேரையும் அனுமதிக்க முடியுமா???

மருத்துவர். அனுரத்னா

மகப்பேறு மருத்துவர்

21/10/2024” இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.