GV Prakash Live Concert: முதல் முறையாக லைவ் கான்செர்ட் நடத்தும் ஜிவி பிரகாஷ் - எங்கு, எப்போது என தெரியுமா?
இதுவரை முன்னணி இசையமைப்பாளர்கள் மட்டுமே லைவ் கான்செர்ட் நடத்தி வந்த நிலையில், முதல் முறையாக இளம் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமாரும் லைவ் கன்செர்ட் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளரான அறிமுகமான ஜிவி பிரகாஷ் குமார், தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ் குமார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 90 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
இதையடுத்து இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர் ஆகியோரின் வரிசையில் ஜிவி பிரகாஷ் குமாரும் லைவ் இசை கான்செர்ட் நிகழ்ச்சியை முதல் முறையாக நடத்தவுள்ளார்.
கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் வரும் 27ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற லைவ் இன் கான்செர்ட் அறிவிப்பு நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ் குமார் கலந்து கொண்டு ரசிகர்களிடம் உரையாடினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
எனது முதல் கான்செட்ர் வரும் 27ஆம் தேதி கோவையில் நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2006 முதல் இசை அமைத்து வருகிறேன். 98 படங்களுக்கு இசையமைத்துள்ளேன்.
கோவையில் நடைபெறும் லைவ் கான்செர்ட் தரமான நிகழ்வாக இருக்கும். ரெக்கார்டிங்கில் இருந்து லைவாக பண்ணுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த லைவ் நிகழ்ச்சியில் பாடகர்கள் சத்யபிரகாஷ், ஹரிணி, ஸ்வேதா மோகன், மாளவிகா போன்றோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வில் 40 முதல் 45 பாசல்கள் பாடப்பட உள்ளன. லைவ் நிகழ்ச்சியில் சினிமாவில் நீங்கள் பாடல் கேட்டதை விட சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்.
லைவ் கான்செர்சடில் ஆயிரத்தில் ஒருவன் செலிபிரேசன் ஆஃப் லைப் மியூசிக்கை புரொமோட் செய்வோம். இந்த நிகழ்ச்சிக்கு ஆர்யா வருவதாக தெரிவித்தார்.
இதில் நீங்கள் மகிழும்படியான பெர்பார்மென்ஸ் இருக்கும். கோவையில் அதிகபட்சமாக தமிழ் பாடல்களை பாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆடுகளம் படத்தில் இருந்து யாத்தே யாத்தே பாடலை பாடினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்