Good Night OTT: ஓடிடியில் குட் நைட்.. எப்போது? எங்கு பார்க்கலாம்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Good Night Ott: ஓடிடியில் குட் நைட்.. எப்போது? எங்கு பார்க்கலாம்?

Good Night OTT: ஓடிடியில் குட் நைட்.. எப்போது? எங்கு பார்க்கலாம்?

Aarthi V HT Tamil
Jun 22, 2023 04:28 PM IST

குட் நைட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குட் நைட்!
குட் நைட்!

‘விக்ரம் வேதா’, ‘ ஜெய் பீம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார்.

குட் நைட், மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகனது. இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் ரெபேக்கா, பக்ஸ், ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கும் இந்தத்திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கி இருக்கிறார். ஜெயநாத் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இப்படத்தில் ஹீரோவுக்கு குறட்டை பிரச்னை. அவர் தனது மூத்த சகோதரருடன் இருக்கிறார். ஆனால் குறட்டை பிரச்னையால் தொடர்ந்து யாரையாவது திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் வாழ்க்கையை அப்படியே தள்ளுகிறார். சில வருடங்கள் கழித்து கதாநாயகி அறிமுகமாகிறார். 

அவளுடன் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறி பின்னர் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். தனக்கு குறட்டை பிரச்னை இருப்பதாக ஹீரோயினிடம் இருந்து மறைத்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகுதான் உண்மை வெளிவரும். குறட்டையால் அவர்களுக்குள் என்ன நடந்தது. கணவனின் பிரச்னையை மனைவி புரிந்து கொண்டாளா அல்லது அடுத்து என்ன நடந்தது? அதுதான் திரைப்படம்.

இந்நிலையில் குட் நைட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளதாம். இது குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.