Good Bad Ugly update: ‘சார் உங்க அர்ப்பணிப்பு.. எப்போதும் நன்றியுள்ளவனாக’ - அஜித் குறித்து ஆதிக் நெகிழ்ச்சி பதிவு!
Good Bad Ugly update: “உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டைக்கண்டு வியக்கிறேன். எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” - ஆதிக் நெகிழ்ச்சி பதிவு!

ood Bad Ugly update: ‘சார் உங்க அர்ப்பணிப்பு.. எப்போதும் நன்றியுள்ளவனாக’ - அஜித் குறித்து ஆத்விக் நெகிழ்ச்சி பதிவு!
Good Bad Ugly First Look: ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிலையில் அஜித்துடன் இருப்பது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அந்தப்படத்தின் இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன், “ உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டைக்கண்டு வியக்கிறேன். எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லவ் யூ மை சார்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அடுத்த வார செவ்வாய்க்கிழமை முடிவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் படக்குழு வேகமாக வேலை பார்த்த காரணத்தால், முதற்கட்ட படப்பிடிப்பு நேற்றைய மாலையே முடிவடைந்து விட்டதாம்.