Good Bad Ugly: துணிவு… ஒழுக்கம்.. கண்ணியம்.. ‘32 வருட சினிமா சாம்ராஜ்யம்’ - போஸ்டர் விட்ட குட் பேட் அக்லி படக்குழு!
Good Bad Ugly: அஜித்தின் திரைவாழ்க்கையை கொண்டாடும் விதமாக, குட் பேட் அக்லி படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
Good Bad Ugly: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக, படத்தில் அவரது லுக்கை பாதுகாக்க வேண்டும் என்பதால், படப்பிடிப்பில் அஜித்குமாருடன் செல்ஃபி எடுக்க படக்குழு தடை விதித்திருந்தது. இதைக்கேள்விபட்ட அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்யுமாறு கூறினார்.
32 வருட திரைவாழ்க்கை கொண்டாட்டம் - அஜித்திற்காக போஸ்டர் விட்ட குட் பேட் அக்லி குழு!
அதன் படி, அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே 19ல் வெளியிடப்பட்டது. அதில் அஜித்தின் வெவ்வேறு பாணியிலான மூன்று படங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் நடிகர் அஜித் குமார் கலர் ஃபுல்லான சட்டை அணிந்து, ஸ்டைலான கூலர் போட்டு, கையில் டாட்டூக்களுடன் மாஸாக இருந்தார். அதன் பின்னர் படத்தில் இருந்து இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் அஜித்தின் திரைவாழ்க்கையை கொண்டாடும் விதமாக, குட் பேட் அக்லி படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.