Top 10 songs today: ‘ஓ ராயா.. மினுக்கி மினுக்கி.. மக்காமஷி.. காத்துக்கீழ’ - இன்றைய டாப் 10 பாடல்கள்!-goat spark makkamishi vazhai then kizhakku water packet minikki minikki these are today top 10 songs - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Songs Today: ‘ஓ ராயா.. மினுக்கி மினுக்கி.. மக்காமஷி.. காத்துக்கீழ’ - இன்றைய டாப் 10 பாடல்கள்!

Top 10 songs today: ‘ஓ ராயா.. மினுக்கி மினுக்கி.. மக்காமஷி.. காத்துக்கீழ’ - இன்றைய டாப் 10 பாடல்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 28, 2024 01:51 PM IST

Top 10 songs today: வாழை தென்கிழக்கு முதல் ஓ ராயா வரை என இன்றைய டாப் 10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.

Top 10 songs today: ‘ஓ ராயா.. மினுக்கி மினுக்கி.. மக்காமஷி.. காத்துக்கீழ’ - இன்றைய டாப் 10 பாடல்கள்!
Top 10 songs today: ‘ஓ ராயா.. மினுக்கி மினுக்கி.. மக்காமஷி.. காத்துக்கீழ’ - இன்றைய டாப் 10 பாடல்கள்!

முதல் இடத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் படத்தின் ஸ்பார்க் பாடல் இடம் பெற்று இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். யுவனும், வருஷா பாலு இணைந்து பாடியிருக்கும் இந்தப்பாடலை, கங்கை அமரன் எழுதி இருக்கிறார். 

இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார். இவர்கள் தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் ராயன் படத்தில் இருந்து வெளியான ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் இடம் பெற்று இருக்கிறது. ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், ஸ்வேதா மோகனும் இணைந்து பாடி இருக்கிறார்கள். கானா காதர் பாடல் வரிகளை எழுதி இருந்தார். இந்தப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லமால் படத்தை இயக்கியும் இருந்தார் தனுஷ்.

பா. இரஞ்சித் இயக்கியிருந்த 'தங்கலான்' திரைப்படத்தின் `மினிக்கி மினிக்கி'  பாடல்  3 வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் பாடலை பாடியவர் பாடகி சிந்தூரி விஷால். 'சீதா ராமம்' போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளரான விஷால் சந்திரசேகரின் மனைவிதான் இந்த சிந்தூரி. உமா தேவி பாடல் வரிகளை எழுதி இருந்த நிலையில், இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். 

4 வது இடத்தில் பால் டப்பா எழுதி, பாடி, நடித்த  ‘காத்துக்கீழ’ பாடல் இடம் பெற்று இருக்கிறது. இந்தப்பாடலுக்கு ofRo இசையமைத்து இருக்கிறார்.

5 வது இடத்தில் ராயன் படத்தில் இருந்து வெளியான ‘ அடங்காத அசுரன்’ பாடல் இடம் பெற்று இருக்கிறது. ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப்பாடலை, நடிகர் தனுஷூம், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பாடி இருந்தனர். இந்தப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லமால் படத்தை இயக்கி இருந்த தனுஷ்தான் இந்தப்பாடலை எழுதி இருந்தார். இந்தப்பாடல் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்தப்படத்தின் இரண்டாவது சிங்கிளான பத்தவைக்கும் பாடல் இந்தப்பட்டியலில் 6 ம் இடத்தை பிடித்திருக்கிறது. அனிருத் இசையமைத்து இருக்கும் இந்தப்பாடலை தீப்தி சுரேஷ் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

 ‘மக்காமிஷி' பாடல் 7 வது இடத்தை பிடித்திருக்கிறது. பால் டப்பா எழுதி இருக்கும் இந்தப்பாடலை பால் டப்பா மற்றும் டகால்டி ஆகியோர் பாடி இருக்கிறனர். ஜெயம்ரவியின் பிரதர் படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப்பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

கோட் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல் 8 வது இடத்தை பிடித்திருக்கிறது. கபிலன் வைரமுத்து எழுதி இருந்த இந்தப்பாடலை யுவன் மற்றும் மறைந்த பாடகி பவதாரணியும் பாடி இருந்தனர். ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் பவதாரணி குரல் கொண்டு வரப்பட்டு இருந்தது. 

இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார். இவர்கள் தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வாழை படத்தில் இருந்து வெளியான தென்கிழக்கு தேன் சிட்டு... செம்பருத்தி பூ மொட்டு...பாடல் இந்தப்பட்டியலில் 9 வது இடத்தை பிடித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த இந்தப்பாடலை பாடகி தீ பாடியிருந்தார். யுகபாரதி பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

10 வது இடத்தில் ராயன் படத்தில் இருந்து வெளியான ‘ ஓ ராயா ’ பாடல் இடம் பெற்று இருக்கிறது. ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப்பாடலை அவரும், பாடகி கணவ்யாவும் பாடி இருக்கின்றனர்.  இந்தப்படத்தில் நடித்ததோடு மட்டுமல்லமால் படத்தை இயக்கி இருந்த தனுஷ்தான் இந்தப்பாடலை எழுதி இருந்தார். இந்தப்பாடல் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.