Thunivu Songs: இருங்க துணிவு தீம் மியூசிக் இருக்கு - ஜிப்ரான் அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thunivu Songs: இருங்க துணிவு தீம் மியூசிக் இருக்கு - ஜிப்ரான் அறிவிப்பு

Thunivu Songs: இருங்க துணிவு தீம் மியூசிக் இருக்கு - ஜிப்ரான் அறிவிப்பு

Aarthi V HT Tamil
Jan 24, 2023 05:38 PM IST

துணிவு படத்தில் 33 தீம் மியூசிக் இருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவித்துள்ளார்.

துணிவு தீம் மியூசிக்
துணிவு தீம் மியூசிக்

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது. இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்து உள்ளார்.

துணிவு படம் தான் பொங்கல் பண்டிகையின் ரியல் வின்னர் என போனி கபூர் போஸ்டர் வெளியிட்டு மகிழ்வித்தாலும், இதுவரை படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து இன்னும் வெளியாகவில்லை.

துணிவு படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தான் வருகின்றனர். இயக்குநர் எச். வினோத்தின் சொந்த ஊரான குடியாத்தம் நகரில் உள்ள பிரபல சக்தி சினிமாஸ் திரையரங்கம் துணிவு படத்தின் இமாலய வெற்றியை ஒட்டி இயக்குநர் தந்தை ஹரி மூர்த்தியை கௌரவித்து உள்ளது.

தியேட்டர் நிர்வாகம் சார்பில் வினோத்தின் தந்தை ஹரி மூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிலையில் துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், துணிவு படத்தில் இடம் பெற்ற 32 தீம் மியூசிக் மற்றும் ஒரு பயன்படுத்தப்படாத தீம் மியூசிக் என மொத்தம் 33 தீம் மியூசிக் விரைவில் வெளியாகும் என தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.